Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
விசித்திரமான காரணத்தைக் கூறி குடியரசு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்திற்கு ஒன்றிய அரசு தடை!
January 25, 2023 • Viduthalai

புதுடில்லி, ஜன. 25  விசித்திரமான காரணத்தைக் கூறி, டில்லியில் நாளை நடைபெறும் குடியரசு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத் திற்குத் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் அன்று குடியரசுத் தலைவர் கொடியேற்றி வைப்பார். அதனைத் தொடர்ந்து முப்படை மற்றும் அனைத்து மாநில வளர்ச்சி, சுற்றுலா மற்றும் அதன் புதிய திட்டங்கள் தொடர்பான மாதிரி களை ஊர்வலமாக கொண்டு வருவார்கள் 

 என்றுமே தடை செய்யாத பஞ்சாப் மாநில அலங்கார ஊர்தியை இந்த ஆண்டு தடை செய்துள்ளது அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் வியப்பை அளித்துள்ளது. 

இதற்குக் காரணம், குருநானக் தனது சீடர்களுக்கு போதிக்கும் காட்சியான கை மற்றும் விரல் போன்றவை அலங்கார ஊர்தியில் வைக் கப்பட்டிருந்தது.   அரசை நோக்கி இந்தக் கை கேள்வி எழுப்புவது போல் இருப்பதால், எந்த ஒரு காரணமும் கூறாமல், பஞ்சாப் மாநில அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. இது தொடர்பாக பஞ்சாப் அரசியல் தலைவர்கள் ஒன்றிய அரசுக்குக் கண்டன அறிக்கை விடுத்துள்ளனர். 

  கடந்த ஆண்டு 75 ஆம் ஆண்டு 'விடுதலை' நாள் என்பதால் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு அலங்கார ஊர்தியில் தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் 1805 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சி யார், அவரது போர்ப் படையில் பெண்கள் படைக்குத் தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கினை அழித்து வீர மரணம் அடைந்த குயிலி, ஆங்கிலேயர்களின் ஆட்சி யினை எதிர்த்துப் போரிட்டு, தூக்குக் கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய வீரன் சுந்தரலிங்கம், அன்னிய படை களை தனியாகச் சென்று அழித்த ஒண்டிவீரன், 'வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக வீர முழக்கமிட்ட மாவீரன் பூலித் தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர் களுக்கு கப்பம் கட்டுவதைத் தடுத்த கட்டா லங்குளம் மன்னர் மாவீரன் அழகு முத்துக்கோன், மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோவில் கோபுரம் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வரும் வகையில், உயிரோட்டமாக சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. 

ஆனால், ''இவர்கள் யாரையுமே இந்தியாவின் பிறபகுதிகளுக்குத் தெரியாது; அதற்கான விளக் கம் தேவைப்படுகிறது. நேரமின்மை காரண மாக தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி  நிராகரிக்கப்படு கிறது'' என்று ஒன்றிய அரசு கூறியது.   இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் அந்த அலங்கார ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பி வைத்தார். இதன் மூலம் ஒரே நாளில் நடக்கவிருந்த ஊர்வலம் ஒரு மாதகாலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீதிதோறும், பள்ளி, கல்லூரிகள் தோறும் சென்று சேர்ந்தது குறிப் பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடான அலங்கார ஊர்திகளுக்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல், ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தது. 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn