Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் கேட்கும் கேள்வி! (744)
பன்றி, மாடு சாப்பிடக் கூடாது என்று எந்த ஆதாரத்தில் உள்ளது? பழக்க வழக்கத்தின் காரணமாக, சுற்றுச் சார்பு காரணமாகவே சாப்பிடுவது கூடாது என்று உள்ளதே தவிர வேறு காரணம் ஏதாவது இருக்க முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
August 09, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (743)
ஒழுக்கக் கேடும், நாணயக் கேடும், தானாகத் தோன்றாமல், சூழ்நிலை காரணமாக ஏற்படுவதா கையினால் - மனிதர்கள் ஒழுக்கக் கேடு, நாணயக் கேடாகவே பிறந்தார்கள் என்று சொல்ல முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
August 08, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (742)
மது அருந்துவது சட்ட விரோதம் என்று சொல்லலாம். இலஞ்சம் வாங்குவதும் அதை விடச் சட்ட விரோதம்தான். இலஞ்சம் வாங்குப வர்கள் எல்லோரும் சமுதாயத்தில் தள்ளப்பட்ட வர்களா? தண்டிக்கப்பட்டவர்களா? வெறுக்கப் பட்டவர்களா? மேல் ஜாதிக்காரர்கள் பெரிதும் இலஞ்சம் வாங்குவதால் அது சர்வ சாதாரணமாகி - சகசமாகி விட்டதா - இல்லையா?…
August 07, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (741)
கட்டாயக் கல்வி என்பதில் தங்கள் குழந்தை களைப் பள்ளிக்கனுப்பாமல் இருக்கிற பெற் றோர்களுக்குத் தண்டனை விதிக்கச் சட்டம் செய்ய வேண்டாமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
August 06, 2022 • Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி! (739)
கடவுள் யோக்கியதை தான் என்ன? திருடனும் கடவுளைக் கும்பிடுகிறான். திருட்டுக் கொடுத்தவனும் கடவுளைக் கும்பிடுகிறான். கடவுள் யாருக்கு நல்லவர்? கடவுளுக்காக நாமா? நமக்காக கடவுளா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
August 04, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (738)
உண்மைச் சுய ஆட்சி வந்துள்ளதா? வரவில்லை; இன்று வந்திருப்பது இடைக்கால வர்ணாசிரம ராச்சியந்தான். உண்மைச் சுய ஆட்சியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருக்க முடியுமா? இருப்பதைச் சுய ஆட்சி என்று கூற முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
August 03, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (737)
தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை ஜாதி இருந்துதான் தீரும். ஜாதி உள்ளவரை தீண்டாமை இருக்குமல்லவா? இவை ஒழித்துக் கட்டப்பட வேண்டாமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
August 02, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (736)
பொருளாதாரத்தில் சரி பண்ணிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே - பொருளாதாரத்தில் எவ்வளவு உயர்ந்தவர்கள் ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன்தானே! பறையன் பறையன்தானே! இதனைப் புரிந்து கொள்ள வேண்டாமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
August 01, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (735)
கடவுள் நம்பிக்கை இல்லாதவனைக் கடவுள் நம்பிக்கைக்காரன் வைவதற்கும், சாபம் கொடுப்ப தற்கும் எவ்வளவு உரிமை உண்டோ, கடவுள் நம்பிக்கைக்காரனை நம்பிக்கை இல்லாதவன் உதைப்பதற்கும் உரிமை உண்டல்லவா? இரண்டும் சட்ட விரோதம்தான். இதில் ஒருவனை ஒருவன் குறை கூறுவதில் பயன் என்ன? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி'…
July 30, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (734)
படிக்கும் பிள்ளைகள் கல்லூரியின் சட்ட திட்டங்களை மதித்து அடங்கித்தான் இருக்க வேண்டுமே தவிர, சண்டை விளைவிப்பதோ கலகம் செய்வதோ பண்புடை மாணவர்களுக்குப் பொருந்தக் கூடுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
July 29, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (733)
நமக்கெல்லாம் கடவுள் எது என்றால், இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்களே கடவுள் களாக இருக்கின்றனவே அல்லாது - தவிர தத்துவப்படியான கடவுள் நமக்கு ஏதேனும் உண்டா? இல்லையே, அது ஏன்? ஏன்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
July 28, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (732)
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப்பட பள்ளிக்கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதாகி விடுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,  ‘மணியோசை’
July 27, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (731)
குடியால் வரும் லாபத்தினால்தான் படிப்புக்குச் செலவு செய்ய வேண்டும் என்று ஏற்படுமானால், மக்கள் படிக்காமல் தற்குறியாக இருந்தாவது உபாத்தியாயர்களெல்லாம் தெருவில் கல்லுடைத்து ஜீவனம் செய்து கொண்டாவது கள்குடியை நிறுத்துவதென்பது மேலானதல்லவா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
July 26, 2022 • Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி! (730)
நமது நாட்டில் படித்தவர்களுக்கும், படியாதவர் களுக்கும் என்ன தாரதம்மியம் இருக்கிறது. படிக் காதவன் குற்றம் செய்கிறான் என்று வைத்துக் கொண்டால், படித்தவன் என்பவனும் அக்குற்றத் திற்குத் தக்க தண்டனை  அடையாமல் செய்து தன்னை விடுவித்துக் கொண்டு அதே குற்றத்தைச் செய்யத் தூண்டுகிறான் அல்லவா? ஆகவே படித்தவனுக்கும…
July 25, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (729)
உலகத்தில் எந்தப் பொருளானாலும் சரி, அந்த பொருளானது அறிவாளியால் உண்டாக்கப் பட்டிருந்தால் காரண காரியங்கள் இருக்கும்; முட்டாள்களால் உண்டாக்கப்பட்டிருந்தால் அதற்கு காரண காரியம் இருக்குமா? கடவுள் என்பதும் காரண காரியமற்றதாக இருப்பதால் முட்டாள்களன்றி வேறு யாரால் அது கண்டு பிடிக்கப்பட்டு, உண்டாக்கப்பட்டிருக…
July 24, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (728)
கடவுள் ஒன்றா? பலவா? பல இருந்தாலும் அவைகளுக்குப் பிறப்பு - இறப்பு உண்டா? உண்டானாலும் அவை விபச்சாரத் தனம், கொலை, வஞ்சகம், பொய், களவு, மோசடி ஆகிய  காரியங்கள் செய்யுமா? அப்படிச் செய்த அந்தப் படியான காரியங்களை மதச் சம்பிரதாயமாகக் கொள்ளுவது அறிவும், மானமும் உள்ள செயலாகுமா? - தந்தை பெரியார்,  'பெரியார…
July 23, 2022 • Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி! (727)
மனிதன் செய்யும் பாவத்தைக் கடவுள் மன்னிப்பார் என்றால் மனிதன் எப்படிப் பாவம் செய்யாமல் இருப்பான்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
July 22, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (726)
கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாதிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார் சகி…
July 21, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (725)
ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அதுபோலன்றி இருந்தால் மக்கள் சுகமாக வாழ முடியுமா? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
July 20, 2022 • Viduthalai
Image
பெரியார் கேட்கும் கேள்வி! (724)
கடவுள் எண்ணம் ஒழிந்தால் பார்ப்பான் இருப்பானா? பறையன் இருக்க முடியுமா? பாட்டாளி, தொழிலாளி, முதலாளி, ஏழை-பணக்காரன் என்கின்ற பேத அடிப்படையில் எவனாவது இருப்பானா? மனிதன் தான் இருப்பான் என்பதன்றி பின் மேற் கூறியவர் போல எவர் இருப்பர்? - தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
July 19, 2022 • Viduthalai
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn