பெரியார் விடுக்கும் வினா! (1331) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 29, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1331)

featured image

கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டாலோ தானே ‘கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்’ என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்? நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் – ஒருவராலும் உண்டாக்கப்பட்ட தல்ல, தானாக, சுயம்புவாக – தோன்றியிருக்கிறது என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கருத்தாக இருக்கிறது. ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதோடு, அதற்காகக் கோபிப்பவனை, ஆத்தி ரப்படுபவனை ‘இரட்டை முட்டாள்’ என்றால் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment