ஹிந்தி மொழியை வளர்ப்பதாகக் கூறி ரூ.5.78 கோடி மோசடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

ஹிந்தி மொழியை வளர்ப்பதாகக் கூறி ரூ.5.78 கோடி மோசடி

ஹிந்தி பிரச்சார சபாவின் மேனாள்  தலைவர் மீது சிபிஅய் வழக்குப் பதிவு

பெங்களூரு, ஜன.25- ஹிந்தி மொழியை வளர்ப்பதாகக் கூறி ரூ.5.78 கோடி மோசடி செய்ததாக ஹிந்தி பிரச்சார சபாவின் மேனாள்  தலைவர் மீது சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது. 

தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஹிந்தி மொழியை பயிற்றுவிக்க தக்சிண பாரத் ஷிந்தி பிரச்சார சபா (டி.பி.எச்.பி.எஸ்) செயல் பட்டு வருகிறது.  1964 ஆம் ஆண்டில்  நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இந்த அமைப்பை தேசிய முக்கியத் துவம் வாய்ந்த நிறுவனமாக ஒன்றிய அரசு அங்கீகரித்தது. ஹிந்தி பயிற்றுவிக்கும் இந் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வருகிறது. 

இந்நிலையில் ஹிந்தி பிரச்சார சபாவின் கருநாடக மாநில தார்வாட் மேனாள் தலை வராக ஷிவ்யோகி ஆர்.நிரால்கட்டி என்பவர் செயல்பட்டு வந்தார். கடந்த 2004-2005 முதல் 2016-2017 ஆம் ஆண்டு வரை, மேற்கண்ட நிறுவனம் 600 ஆசிரியர்களை பணியமர்த் தியதன் மூலம் ரூ.5.78 கோடியை முறை கேடாக செலவழித்ததாகவும், இந்தத் தொகையை பி.எட் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முறைகேடாக பயன்படுத் தியதும், ஒன்றிய அரசிடம் பொய்யான அறிக்கைகளை அளித்ததாகவும் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் தணிக்கையில் தெரிய வந்தது.

முறை கேடு நடந்துள்ளது 

உறுதி செய்யப்பட்டது

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பெங்களூரு பிரிவு சிபிஅய் விசா ரணை நடத்தியது. இந்த விசாரணையின் மூலம் முறை கேடு நடந்துள்ளது உறுதி செய் யப்பட்டது.

இதனால்  ஹிந்தி  பிரச்சார சபாவின் மேனாள் தலைவர் ஷிவ்யோகி ஆர்.நிரால் கட்டி, அவரது மகன் மற்றும் அடையாளம் தெரியாத சில நபர்கள் மீது மோசடி மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் சிபிஅய், வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.

No comments:

Post a Comment