வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடில்லி, ஜன. 18- நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி, சட்டப் பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக் காளர் பட்டியலை பயன்படுத்தவும், வாக்காளர் பட்டிய லிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கும், தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன் றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.தேவசகாயம் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தாக்கலான பதில்மனுவில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்ப டுவதற்கு முன் வாக்காளர்களுக்கு முறையாக முன் அறிவிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் கருத்து கேட்கப் படுகிறது. அதன்பிறகுதான் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை நீக்க வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான முன் அறிவிக்கை இல்லாமல், கருத்தைக் கேட்காமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment