சென்னையில் 18 இடங்களில் நடந்த சென்னை சங்கமம் ‘நம்ம ஊரு திருவிழா’ நிறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

சென்னையில் 18 இடங்களில் நடந்த சென்னை சங்கமம் ‘நம்ம ஊரு திருவிழா’ நிறைவு

சென்னை, ஜன. 18- தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக கடந்த தி.மு.க. ஆட்சியில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா மீண்டும் இந்த ஆண்டு புத்துணர்வோடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு நாகரிகம், பண்பாடு மற்றும் நாட்டுப்புற கலைகளை அடையாளப்படுத்தக்கூடிய பல்வேறு நிகழ்ச் சிகளை உள்ளடக்கிய 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'வை சென்னை தீவுத்திடலில் கடந்த 13ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தீவுத் திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதா னம், எழும்பூர் அருங்காட்சியகம் என மொத்தம் 18 இடங் களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.


கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து என தமிழர்களின் பாரம்பரிய கலைகளை 600-க்கும் மேற் பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தினந்தோறும் மாலை நேரங்களில் அரங்கேற்றினார்கள். கனிமொழி எம்.பி.யின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை சென்னைவாசிகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித் தனர். கலைஞர்கள் பிரதிபலித்த கலையின் வடிவத்தை பார்த்து மெய் சிலிர்த்து போனார்கள். சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த உணவு திருவிழாவும் களை கட்டியது. 


கடந்த 14ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நேற்று   கடைசி நாள் ஆகும். காணும் பொங்கல் தினமான நேற்று (17.1.2023) மாலை நேரத் தில் பாரம்பரிய கலைகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வத் தோடு குவிந்தனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற மாநக ராட்சி விளையாட்டு மைதானங்கள், தீவுத்திடல், கடற் கரைகள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதியது. கடல் அலை போன்று திரண்ட பொதுமக்களை பார்த்து, கலைஞர் களும் உற்சாகம் அடைந்தனர். கடந்த 4 நாட்கள் நடை பெற்ற சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நேற்று நிறைவடைந்தது. 


No comments:

Post a Comment