“நான் அன்றே எச்சரித்தேன்... இனி நமது பொறுப்பு...'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

“நான் அன்றே எச்சரித்தேன்... இனி நமது பொறுப்பு...''

ஜோஷிமத் பேரிடர் குறித்து உமாபாரதி

உத்தராகண்ட் , ஜன.14 கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தரா கண்ட், இமயமலை ஆகிய பகுதிகள் ஒருநாள் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதாக மேனாள் ஒன்றிய அமைச்சரும், மத்தியப் பிர தேசத் தின் மேனாள் முதலமைச்சரு மான உமா பாரதி தெரிவித்துள்ளார்.

பாஜவைச் சேர்ந்த உமா பாரதி, நிலவெடிப்பு காரணமாக மண்ணில் புதைந்துவரும் ஜோஷிமத் நகருக்குச் சென்றார். அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய அவர், “டில்லி யில் உள்ள கொள்கை வகுப் பாளர்கள் இதுபோன்ற திட் டங்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளனர். இந்தக் கொள்கை வகுப்பாளர்கள் உத்தராகண்டை ஒருநாள் இல்லாமல் செய்து விடு வார்களோ என்று எனக்கு அச்ச மாக இருக்கிறது.

நான் கடந்த 2017-ஆம் ஆண்டே என்டிபிசி திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது இந்தத் திட்டம் மீளமுடியாத இழப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்திருந் தேன். அப்போது அதற்கு ஒன்றிய அரசின் ஆதரவு கிடைக்கவில்லை. ரெனி கான் சம்பவம் நிகழ்ந்தது. அப்போதும் ‘ஜோஷிமத் ஒருநாள் இதேபோன்ற சம்பவத்தை சந்திக் கும்’ என்று தெரிவித்தேன். பின்னர், அது தொடர்பாக பிரதமர் அலுவ லகத்தில் இருந்து அங்குள்ள அதி காரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. அப்போது ஜோஷிமத் புதையவில்லை.

அதன்பின்னர், புதிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அது, 50 சதவீதம் முடிவடைந்த திட்டங் களுக்கு மீண்டும் அனுமதி அளித் தது. அதன்பின்னர் அது என்டிபிசி திட்டத்திற்கு கீழ் வந்தது. இப்போது ஜோஷிமத் புதையும் விவகாரத்தில் என்டிபிசியின் பங்கு என்ன என்று நிபுணர்கள் கூறுவார்கள். நான் இப்போது அதைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை.நான் சோனியா காந்திக்கு ஒரு வேண்டு கோள் விடுக்கிறேன். இது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தும் நேரம் இல்லை. நமக்கு இருக்கும் பெரிய பொறுப்பு, அந்த இடத்தை காலி செய்யவேண்டியது. வளர்ச்சியும் அழிவும் ஒன்றாக இருக்க முடியாது. வளர்ச்சியும் நம்பிக்கையும் இணைந்தே இருக்கும். வளர்ச்சி, மனித வாழ்க்கை, சுற்றுச்சூழல் அனைத்தும் ஒன்றாக இருக்க முடியும். வளர்ச்சியும் அழிவும் ஒன்றாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

தபோவன் நீர்மின்திட்டம்: ஜோஷிமத்தில் தற்போது ஏற்பட்டி ருக்கும் இந்தப் பிரச்சினைக்கு என்டிபிசியின் தபோவன் விஷ்ணு காட் நீர்மின் திட்டமே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் இதனை மறுத்து என்டிபிசி அறிக்கை வெளியிட் டுள்ளது. கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், "தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டத்தின் எந்த சுரங்கப்பதையும் ஜோஷிமத் நகர் வழியாக செல்ல வில்லை. என்டிபிசியின் சுரங்கப் பாதைகளுக்கும் ஜோஷிமத் நிலச் சரிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று என்டிபிசி தெளிவு படுத்த விரும்புகிறது. இந்தக் கடின மான சூழ்நிலையில் ஜோஷிமத் நகர மக்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்புலம் என்ன? - அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை, பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடை பெறுவதே நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக மலைப்பகுதிகள் வெட்டப்பட்டு, அகலப்படுத்தப்படுகின்றன.

இது இந்த மண்டலத்தின் நிலப்பகுதியை நிலைகுலையச் செய் யும் என்று இமயமலையின் டெக் னானிக்ஸ் நிபுணரும், கருநாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள என்அய்ஏஎஸ் மய்யத்தின் புவியியல் நிபுணருமான சி.பி.ரா ஜேந்திரன் எச்சரிக்கை செய்துள்ளார்.

No comments:

Post a Comment