“அனைத்திற்கும் மேலானது அரசமைப்புதான்; நாடாளுமன்றம் அல்ல” குடியரசுத் துணைத் தலைவர் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

“அனைத்திற்கும் மேலானது அரசமைப்புதான்; நாடாளுமன்றம் அல்ல” குடியரசுத் துணைத் தலைவர் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி

புதுடில்லிஜன.14 - ஜெய்ப்பூரில் நேற்று முன்னாள் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், நாடாளுமன்றத்தின் இறையாண் மையை நீதித் துறை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடாளுமன் றத்தின் இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சியை நீதித் துறை மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படும் சட்டங்கள் மீதான தீர்ப்பின்போது, அவை அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்ட மைப்புக்கு எதிரானது என நீதிமன் றங்கள் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்த தன்கர், நாடாளு மன் றமே மேலானது என்று குறிப்பிட்டார்.

ப.சிதம்பரம்

இதுகுறித்து காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம்,சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது'' அனைத்திற்கும் மேலானது நாடாளுமன்றம் என குடியரசுத் துணைத் தலைவர் கூறி இருப்பது தவறானது. அரசியல் சாச னம்தான் அனைத்திற்கும் மேலானது.  அடிப் படை கட்டமைப்பு என்பது அரசி யலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மீது பெரும்பான்மையினரால் நடத்தப்படும் தாக்குதலை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.

தற்போது இருக்கும் நாடாளு மன்ற முறைக்கு பதிலாக குடியரசுத் தலைவர் முறைக்கு ஆதரவாகவோ, மாநிலங்களுக்கு இருக்கும் சட்டமி யற்றும் தனி அதிகாரத்தை வழங் கும் சட்டம் ரத்து செய்யப்படுவ தாகவோ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் சட்டம் இயற்றப்படுமா னால் அது செல்லு படி யாகுமா?

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான தேசிய  நீதித் துறை நியமன ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்றம் தள்ளு படி செய்ததை தன்கர் விமர்சித்திருக் கிறார். அந்த மசோதா தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு வேறொரு புதிய மசோதாவைக் கொண்டு வரும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளதே? அதை யார் தடுத்தார்கள்?

நாடாளுமன்றம் இயற்றும் ஒரு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய் கிறது என்றால் அதற்கு அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு தவறு என்று அர்த்தமல்ல. ஏதோ ஆபத்து வர இருப்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையே குடியரசுத் துணைத் தலைவரின் கருத்து உணர்த்துகிறது'' என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment