பழைமைவாத உத்தரப்பிரதேச திருமணங்களில் புதிய மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

பழைமைவாத உத்தரப்பிரதேச திருமணங்களில் புதிய மாற்றம்

புதுடில்லி, ஜன.29 நாட்டின் பெரிய மாநிலங்களில் உத்திரப்பிரதேசம் முக்கிய மாநிலமாக உள்ளது. பாரம்பரியம், கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்த மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குளிர்காலத்தில் நடைபெறுகின்றன. இதில் ஆண்டுதோறும் மாற்றங்கள் இடம்பெறுவது உண்டு.

அந்த வகையில் கடந்த நவம்பரில் தொடங்கிய திருமணக் காலத்தில் வர்ணனையாளர்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளனர். வழக்கமாக விழா மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெறும் இவர்கள் தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளனர்.

உத்தரப்பிரதேச திருமணங்களில் கையில் ஒலிபெருக்கியுடன் ஆண் அல்லது பெண் வர்ணனையாளரை பார்க்க முடிகிறது. சில திருமணங்களில் இருவரும் கூட மாறி, மாறி நிகழ்ச் சியை தொகுத்து வழங்குகின்றனர். மேடையில் மணமக்களை வாழ்த்த வரும் விருந்தினர்கள் பற்றியும் இவர்கள் சில வார்த்தைகள் கூறி மகிழ்விக்கின்றனர்.

இவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு முன்னதாகவே மணமக்கள் பற்றிய பல சுவையான தகவல்களை திரட்டி வைத்துக் கொள்கின்றனர். 

இத்துடன் இவர்களின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றியும் அறிந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரையும் மேடையில் பாராட்டி மகிழ்விப்பது இவர்களது புதிய பணியாகி விட்டது. 

இதற்காக சில மணி நேரத்திற்கு இவர்கள் ரூ.5,000 முதல் 20,000 வரை ஊதியமாகப் பெறுகின்றனர்.

இதுகுறித்து  கான்பூரின் வர்ணனை யாளர் கனிஷ்கா கூறும்போது, “தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப் பாளராக முயன்றேன். ஆனால் அது முடியாமல் போனது. தற்போது அதைவிட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக இருக் கிறேன். இதில் புதியவர்களின் தொடர்புகளும், பெரியவர்களின் வாழ்த்துகளும் கிடைக்கிறது. நாங்கள் பேசும் மேடை நிகழ்ச்சி முழுவதையும் காட்சிப் பதிவு செய்து, கண்டு களிப்பது எங்கள் பெருமையை பேசுவதாகவும் உள்ளது” என்றார்.

பெரும்பாலும் நடுத்தர குடும்ப திருமண நிகழ்ச்சிகளில் இந்த வர்ண னையாளர்கள் இடம்பெறுகின்றனர். முஸ்லிம்கள் இம்முறையை இன்னும் பயன்படுத்தத் தொடங்கவில்லை. திருமணம் தவிர பிறந்த நாள் உள் ளிட்ட வேறு சில குடும்ப நிகழ்ச் சிகளிலும் வர்ணனையாளர்களை உத்தரப்பிரதேச வாசிகள் பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர். இத னால் பேச்சுத்திறமை கொண்ட வர்ண னையாளர் களுக்கு புதிய மேடையாக இந்த நிகழ்ச்சிகள் அமைந்து வரு கின்றன.


No comments:

Post a Comment