ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை: ஒழுங்குபடுத்த ஆணையமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை: ஒழுங்குபடுத்த ஆணையமாம்

புதுடில்லி, ஜன. 14- ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் அடிமை யாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள் ளும் நிலைக் குச் செல்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு கடந்த 2ஆம் தேதி ஆன்லைன் விளை யாட்டுகள் தொடர்பான வரைவு மசோதாவை வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டு களை ஒழுங்குபடுத்த சுய ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க முன் மொழியப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது: ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்படும் இந்த ஆணையம், ஆன்லைன் விளை யாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். மேலும், விளையாட்டுகளின் உள்ளடக் கத்தைக் கண்காணிக்கும். இந்த ஆணையத்தில், ஆன் லைன் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப் படாது. அனைவரது நலன்களை மய்யப்படுத்தி ஆணை யம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சட்டம் பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற் போது வரைவு மசோதா தொடர் பாக பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர் களிடம் கருத்து கேட் கப்படுகிறது. மேலும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், துறை சார் நிபுணர்கள், முதலீட்டாளர்களி டமும் கருத்து கேட்கப்படஉள்ளது.


No comments:

Post a Comment