புதுக்கோட்டை அருகே குடிநீரில் மலம் கலந்த கொடுமை தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தண்ணீர்த் தொட்டி கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

புதுக்கோட்டை அருகே குடிநீரில் மலம் கலந்த கொடுமை தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தண்ணீர்த் தொட்டி கூடாது!

சமூக நீதி கண்காணிப்பு குழுவினர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை, ஜன 14- புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் காலனியில் தாழ்த் தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி யில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக சமூக நீதி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொள்வார்கள் என்று அந்த குழுவின் உறுப்பினர் செய லர் அறிவித்திருந்தார். 

அதன்படி பேராசிரியர் சுவாமி நாதன் தேவதாஸ் தலைமையில் ராஜேந்திரன், கருணாநிதி, மருத்து வர் சாந்தி ரவீந்திரநாத் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட சமூக நீதி கண்காணிப்பு துணை குழுவி னர் நேற்று (13.1.2023) வேங்கைவயல் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண் டனர். அப்போது சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டனர். 

பின்னர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அதிகாரிகளிடம் விசாரித்து, எடுக் கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். இதேபோல் இறை யூரில் உள்ள பொது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், அய் யனார் கோவிலையும் பார்வையிட் டனர். 

இதைத்தொடர்ந்து ஆட்சியர் கவிதாராமுவை ஆட்சியர் அலு வலகத்தில் அக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவையும் சந்தித்து பேசினர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தனர். முன்னதாக வேங் கைவயலில் ஆய்வுக்குழு உறுப்பி னர் சுவாமிநாதன் தேவதாஸ் கூறியதாவது:- இந்த ஆய்வின்போது விசாரித்ததை குறித்துக் கொண் டோம். அரசுக்கு விரிவான அறிக் கையை விரைவில் சமர்ப்பிப்போம். மனித சமூகத்தில் இதுபோன்ற மோசமான சம்பவம் நடைபெறக் கூடாது என அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். 

அதனை செய்தது யார்? என் பதைக் கண்டறிய விசாரணைக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி கள் இறுதிப்படுத்தப்பட்டு விட்ட தாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் இவர் தான் குற்றவாளி என்று திடீரென சந் தேகத்தின்பேரில் கூட நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் எல்லா தகவல்களையும் சேகரித்து, ஆராய்ந்து, சரியான நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். வெளியூர்களில் இருந்து பல்வேறு அரசியல் கட்சியி னர், பல்வேறு அமைப்பினர் இங்கு வந்து சம்பவத்தை தீவிரப்படுத்துவ தாகவும், அதனால் வெளியூர் ஆட்கள் வர தடை விதிக்கப்படுமா? என்றும் கேட்கிறீர்கள். அது பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடி யாது. அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். 

வேங்கைவயலில் வன்கொடுமை இருந்ததால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு, இரட் டைக் குவளை முறை குறித்து இப் பகுதி பொதுமக்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை என கூற முடி யாது. மாவட்ட நிர்வாகம் மிகத் தெளிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

உண்மையான குற்றவாளியை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு வந்துள்ள அரசு உதவித் தொகை கொடுக்கப்பட உள்ளது. ஒரு மருத்துவ குழு இயங்கி வரு கிறது. 

தேனீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்பட வில்லை என்றால் அதனை வழக்கு மன்றத்தில்தான் தெரிவிக்க வேண் டும். இந்த பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக் கப்படும். தாழ்த்தப்பட்ட சமூக மக் களுக்கு தனியாக குடிநீர் தொட்டி வைக்காமல் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் பொதுவான குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் என்று அரசிடம் பரிந்துரை செய்வோம். இந்த சம்பவத்தில் புலன் விசா ரணை காலதாமதம் என்று கூற முடியாது. 

குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் குழுவின் பரிந்துரை. இவ் வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment