தங்களது விசுவாசிகளுக்கு தரும் பரிசாக நீதித்துறை நியமனங்களைப் பார்ப்பதை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

தங்களது விசுவாசிகளுக்கு தரும் பரிசாக நீதித்துறை நியமனங்களைப் பார்ப்பதை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்

[23-01-2023 நாளிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்]

 சில வழக்குரைஞர்களை  உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு  கொலஜியம்  செய்த பரிந்துரையை தடுத்து நிறுத்துவதற்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட  முயற்சிகளை  உச்சநீதிமன்ற  கொலிஜியம்  வெற்றிகரமாக முறியடித்துவிட்டது. வழக்குரைஞர் சவுரப் கிருஜீபாலை டில்லி உயர்நீதி மன்றத்துக்கும்,  வழக்குரைஞர் ஆர்.  ஜான் சத்யனை சென்னை உயர்நீதிமன்றத்துக்கும்,  வழக்குரைஞர் சோமசேகரன்  சுந்தரேசனை மும்பை  உயர்நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்  என்ற  தங்களது  பரிந் துரைகளை  மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கொலிஜியம்  மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஒவ் வொருவர் வழக்கிலும் ஒன்றிய  அரசு  தெரிவித் திருந்த ஆட்சேபனைகளுக்கு மிக விரிவாக கொலிஜியம் அளித்த பதிலில் இருந்து, அரசமைப்பு சட்ட நீதிமன்றங்களுக்கு  நீதிபதிகளை  நியமிப் பதில் ஒன்றிய  அரசு நீதித்  துறையுடன் மேற் கொண்டுள்ள முரண்பாடு,  போட்டியின் பின்ன ணியில் உள்ள  நோக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.  

கொலிஜியம் பரிந்துரைத்தவர்களை  நியமனம் செய்வது குறித்த ஒன்றிய அரசின் ஆட்சே பனைகளின் ஏற்றுக் கொள்ள  முடியாத  தன்மை யைப் பற்றிய  ஒரு தோற்றத்தை,  கொலிஜியத்துக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து காட்டுகிறது. நீதித்துறை நியமனங் களைத் தங்களது  முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பதற்கு  ஒன்றிய  அரசு எந்த  அளவுக்கு  விரும்புகிறது என்பதை அது மிகத் தெளிவாகக் காட்டுகிறது. ஒருவரது பாலுறவு விருப்பத்திற்கு  அரசு  தெரிவித்திருந்த  ஆட் சேபனை ஆட்சியாளர்களின் பாகுபாடு நிறைந்த  பழைமைவாத மனநிலையை காட்டுகிறது. மற்ற இருவரது நியமனத்துக்கு  அவர்கள்  சமூக  ஊடகத்தில் கருத்து தெரிவித்த காரணத்துக்காக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இது, உயர்நீதித் துறை நீதிபதிகளின்  நியமனத்தை தங்களது விசுவாசிகளுக்கு  அளிக்க விரும்பும் அரசின்  மனோநிலையைக் காட்டுகிறது. கொலி ஜியம்  சுட்டிக் காட்டியது போல, சவுரப் கிருபாலின் பாலுறவு  விருப்பமோ,  மற்ற  இருவரும்  ஊடகத் தில் பகிர்ந்து கொண்ட  அவர்;களது  அரசியல் கண்ணோட்டங்களோ, நீதிபதிகளாக அவர்கள் செயல்படுவதற்கு எந்த  வகையிலும் தகுதியற்றவர் களாகவோ, நேர்மையற்றவர் களாகவோ  ஆக்கி விடாது.

நீதிபதிகளாக  நியமனம் செய்யப்படுவதற்கு தகுதி படைத்தவர்களுக்கு,  அவர்களது  சொந்த அரசியல் கண்ணோட்டங்கள் இருக்கக்கூடாது என்றோ அல்லது தங்களது  கண்ணோட்டங் களையோ கருத்துகளையோ வெளிப்படுத்தும்  அவர்களது போக்கு,  அவர்கள் நீதிபதிகளாக ஆற்றும்; செயல்பாடுகளில் விருப்பு வெறுப்பு  கொண்டதாகவே இருக்கும் என்றோ அரசு  கருதுவதாகவே  தோன்றுகிறது. அரசியல் கட்சி களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தங்களது விசுவாசிகள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதில் அரசு  எந்தவித ஆட்சேபனையும் கொண்டிருக்க வில்லை என்ற  உண்மையை எவராலும் மறுக்கவோ,  மெய்ப்பிக்கவோ முடியாது.

நீதித்துறை நியமன வரலாற்றில், ஒன்றிய அரசு அல்லது மாநில அரசுகளின்  அரசியல் தலைமையின் நம்பிக்கையைப் பெற்ற சட்ட அலுவலர்கள்  ஏராளமானவர்கள் நீதித்துறை அலுவலர்களாக  இருக்கின்றனர்  என்றும், அரசியல் தலைவர்கள் சார்பாக  ஆஜராகும் வழக்குரைஞர்களுக்கு உச்சநீதி  மன்ற  உயர்நீதி  மன்ற  அமர்வுகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது  என்றும்  எவர் ஒருவராலும் கூறமுடியும்.

குறிப்பாக  பாலுறவு  விருப்பம் பற்றிய  ஆட்சேபனை அருவருக்கத்தக்கதாகும். இதன்  காரணம்  அது,  பாலினம் மற்றும்  பாலுறவு விருப்பத்தின் அடிப்படையில் வேற்றுமை  பாராட்டுவது அரசமைப்பு சட்ட நிலைப்பாட்டுக்கு  எதிரானது என்பதே. கொலிஜியம்  நடைமுறையில் நீதிபதிகள்  நியமனம் செய்யப்படும் நடைமுறை குழப்பம் மிகுந்ததாக இருப்பதால் தவறானது என்ற  கண்ணோட்டமும், நியமனங்கள்  பரிசீலனை செய்யப்படுவதற்கான வட்டம் மிகக்  குறைவாக இருக்கிறது என்பதும் பரிசீலிக்கத் தகுந்தவையே  ஆகும்.  என்றாலும், தங்களின்  அரசியல் செயல்திட்டத்தை  முன்னெடுத்துச் செல்ல இயலாதவர்கள் என்று சந்தேகிக்கப்படும்  வழக்குரைஞர்களை நியமன நடைமுறையின் போது தற்போதுள்ள ஒன்றிய ஆட்சியாளர்கள் வடிகட்டுவது,    அரசின் எந்த மாதிரியிலான குறுக் கீட்டை  அனுமதிப்பதும்  நீதித் துறையின் சுதந் திரத்துக்கான  ஒரு அச்சுறுத்தலாகவே  இருக்கும் என்ற  எண்ணத்தை  மிக நிச்சயமாகவே அளிக்கும்.

நன்றி:  'தி இந்து'  23-01-2023

தமிழில்:  த.க.பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment