எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் இறங்குவேன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் இறங்குவேன்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

 பாட்னா, ஜன.7 மார்ச் மாதத்துக்கு பிறகு, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியைத் தொடங் குவேன் என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி நடந்து வருகிறது. 

பா.ஜனதா கூட்டணியில் இருந்த பீகார் மாநில முதலமைச்சர்  நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் அதில் இருந்து விலகி, ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கைகோர்த்தார். பின்னர், செப் டம்பர் மாதம் டில்லி சென்று, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள் ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர் களை சந்தித்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து கூறினார். காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் முடிந்த பிறகு அதுபற்றி முடிவு செய்வதாக சோனியாகாந்தி உறுதி அளித்தார். 

இந்தநிலையில், நிதிஷ்குமார் 'சமாதான நடைப்பயணம்' என்ற பயணத்தை 5.1.2023 அன்று தொடங்கினார். அப்போது அவரி டம், தேசிய அளவில் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி குறித்து செய்தியாளர்கள் கேட் டனர். அதற்கு நிதிஷ்குமார் கூறிய தாவது:- எனது அரசு தொடங்கிய வளர்ச்சித் திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளதா? இல்லையா? என் பதை ஆய்வு செய்வதில்தான் இப் போது மிகவும் அக்கறையாக இருக் கிறேன். மாநிலம் முழுவதும் பய ணம் செய்யப்போகிறேன். வளர்ச்சி திட்டங்கள் முடிவடைந்து இருந்தால், மகிழ்ச்சி அடைவேன். முடிவடையாவிட்டால், அவற்றை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத் தரவிடுவேன். இந்த நடைப்பயணம், பிப்ரவரி மாதம்வரை நடக்கும். அதன்பிறகு பீகார் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். மார்ச் மாத இறுதி வரை கூட்டத்தொடர் நடக்கும். அதைத்தொடர்ந்து, தேசிய அள வில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான வாய்ப்புகளை கவனிப்பேன். அந்த பணியை புதி தாக மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment