அரியானா பிஜேபி ஆட்சியில் நடக்கும் விபரீத பேரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

அரியானா பிஜேபி ஆட்சியில் நடக்கும் விபரீத பேரம்!

சண்டிகர், ஜன.7 அமைச்சர் மீதான வழக்கை மறந்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட ரூ.1 கோடி தருவதாக கூறுகின்றனர்" என்று, அரியானா விளையாட்டுத் துறை அமைச்சர் மீது பாலியல் புகாரை பெண் பயிற்சி யாளர் தெரிவித்துள்ளார்.

 பெண் தடகளப் பயிற்சியாளர் ஒருவர், அரியானா விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சந்தீப் சிங் மீது பாலியல் குற்றாச்சாட்டை முன் வைத்தார். கடந்த ஜூலை மாதம் கொடுத்த புகாரை அந்த மாநில அரசு கண்டுகொள்ள வில்லை. பின்னர் எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 30.12.2022 அன்று அப்பெண் ணின் புகார் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  இந்தநிலையில் அப்பெண்  சண்டிகர் காவல்துறையின் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த அவர் கூறிய தாவது: 

"எனது புகார் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக் கப்பட்டுள்ளது. அவர்களிடம் நடந்த அனைத்தையும் விவரமாக தெரிவித்தேன். இந்த விசாரணை யில் அரியாணா முதலமைச்சர் செல்வாக்கு செலுத்துகிறார்.

அமைதியாக இருக்க எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நான் முதலமைச்சரின் அறிக் கையை கேட்டேன். அவர் சந்தீப் சிங் பக்கம் இருப்பதாக தெரிகிறது. சண்டிகர் காவல்துறையினரிட மிருந்து எந்த அழுத்தமும் வர வில்லை. ஆனால் அரியானா அரசு எனக்கு அழுத்தம் தருகின்றனர். நான் விரும்பும் எந்த நாட்டிற்கும் சென்று வசிக்க எனக்கு மாதம் ரூ.1 கோடி தருவதாக தொடர்ந்து தொலைப்பேசியில் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன" என்றார்.

பயிற்சியாளரின் வழக்குரைஞர் திபன்சு பன்சால் கூறுகையில், "அரியானா முதலமைச்சர் இந்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தார். அவர்களிடம் அனைத்து விடயங்களும் கூறப்பட் டுள்ளது. ஆனால் காவலர் சந்தீப் சிங்கை கைது செய்யவில்லை. இது பினையில் வெளியே வரமுடியாத வழக்கு. ஆனால் ஒரு முறை கூட அவர் விசாரணைக்கு அழைக் கப்படவில்லை ஆனால், பெண் பயிற்சியாளர் 4 முறை விசா ரணைக்கு அழைக்கப்பட்டுவிட் டார்" என்று குற்றம்சாட்டினார்.

முன்னதாக, பாஜக ஆட்சி நடந்து வரும் அரியானா மாநிலத் தில் விளையாட்டுத் துறை அமைச் சராக பொறுப்பு வகித்து வந்த சந்தீப் சிங் மீது கடந்த டிசம்பர் மாதம் பெண் தடகளப் பயிற்சி யாளர் ஒருவர் பாலியல் குற்றச் சாட்டை முன்வைத்தார்.

அந்தப் பெண் பயிற்சியாளர், எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து, அமைச்சர்ச ந்தீப் சிங்கின் பாலியல் அத்துமீறலைப் பகிரங்கப்படுத் தினார். "அமைச்சர் சந்தீப் சிங் முதலில் என்னை இன்ஸ்டா கிராமில் தொடர்பு கொண்டார். எனது விளையாட்டுச் சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக நான் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறி னார். நான் மற்ற ஆவணங்களுடன் அமைச்சரை சந்திக்க, அவரது வீட் டுக்குச் சென்றேன். அப்போது அவர் பாலியல் ரீதியாக எல்லை மீறினார். தொடர்ந்து எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி, மிரட்டி னார். கடந்த பிப்ரவரி முதல் நவம்பர் வரை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித் தார். இந்த நிகழ்வு அரியானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சண்டிகர் காவல் துறையினர் சந்தீப் சிங் மீது   பாலியல் துன்புறுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இதை யடுத்து, சந்தீப் சிங் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்


No comments:

Post a Comment