பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதா?

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

சென்னை,ஜன.5- பத்திரிகையாளர்களை அச்சுறுத் துவதா? என சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ), பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.அதன் விவரம்  வருமாறு:

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "நீ எந்தச் சேனல்? நீ எந்தச் சேனல்?" என்று கேட்டு பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்ததுடன், மிரட்டும் வகையில் மீண்டும் பேசியிருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. தமக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்து திசைதிருப்புவது, மிரட்டுவது என்பதைக் கை யாண்டு வருகிறார். இந்தப் போக்கை அவர் கைவிடுவதுடன், ஊடகங்களின் உரிமைகளை மதித்து நாகரிகமான அணுகு முறையைக் கையாள முன்வர வேண்டும் என வலியுறுத்து கிறோம்  என சென்னை பத்திரிகையாளர் யூனியனின் தலை வர் எல்.ஆர்.சங்கர், பொதுச் செயலாளர், 

வை. மணிமாறன் ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment