சூரியசக்தி மின்சார உற்பத்தி : புத்தாண்டில் புதிய சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

சூரியசக்தி மின்சார உற்பத்தி : புத்தாண்டில் புதிய சாதனை

சென்னை, ஜன.5- தமிழ்நாடு மின் வாரியம், புத்தாண்டு தினத்தன்று, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, எப் போதும் இல்லாத அளவாக, 4,317 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்து, புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள், 5,820 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள் ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. சூரியசக்தி மின் நிலை யங்களில் இருந்து, மழை தவிர்த்த மற்ற நாட்களில், தினமும் பகலில் சராசரியாக 2,500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இது, மின் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கிய பங்கு வகிக்கிறது.  முதன்முறையாக டிச., 22ஆம் தேதி, 4,000 மெகா வாட்டை தாண்டி, 4,141 மெகா வாட் கொள்முதல் செய்யப் பட்டது. டிச., 24ஆம் தேதி 4,905 மெகா வாட் என, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 4,000 மெகா வாட் மேல் கொள்முதல் செய்யப்பட்டது.  இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று, எப்போதும் இல்லாத அளவாக 4,317 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்து, மின் வாரியம் புதிய சாதனை படைத்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்திற்கு, தமிழ்நாடு முன்னுரிமை அளிப்பதே இதற்கு முக்கிய காரணம்.


No comments:

Post a Comment