உத்தராகண்ட்டில் 4 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை அப்புறப்படுத்தும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

உத்தராகண்ட்டில் 4 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை அப்புறப்படுத்தும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

புதுடில்லி, ஜன.7 - உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் இருந்து 4 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை வீடுகளிலிருந்து வெளி யேற்ற உத்தரவிட்ட அம்மா நில உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

உத்தராகண்ட்டில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மூன்றாவது பெரிய  மாநகரம் ஹல்த்வானி. இங்கு ரயில்வேக்கு சொந்தமான 29 ஏக்கர்  நிலத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்திருப்ப தாக நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், கடந்த டிசம்பர் 20-ஆம்  தேதி இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்த  உத்தராகண்ட் உயர் நீதிமன்றம், 

“ரயில்வே நிலத்தை ஆக் கிரமத்திருக்கும் மக்கள் அனை வரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், நிலத்தை ரயில்வே வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.  இந்த உத்தரவு ஹல்த்வானி பகுதி யில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித் தது. தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் இடத்திலிருந்து, காலி செய்தால் தாங்கள் எங்கே போவது? என்று தெரியாமல் திகைத்த 4 ஆயி ரத்திற்கும் மேற் பட்ட முஸ்லிம் குடும்பங்கள்   மெழுகுவர்த்தி ஊர்வலம், உள்ளி ருப்புப் போராட்டம் மூலம் தங் களின் எதிர்ப்பை தெரிவித்தனர். 

 மாறாக, முஸ்லிம் குடும் பங்களை ஹல்த்வானியிலிருந்து வெளியேற்ற உத்தராகண்ட் மாநில பாஜக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந் துத்துவா அமைப்புகள் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக முஸ்லிம்களை வீடு களிலிருந்து வெளியேற்றும் உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை  எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சமூக ஆர்வலரும், வழக்குரைஞ ருமான பிரசாந்த் பூஷணும் இது தொடர்பாக நீதிபதிகளிடம் முறையிட்டார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதி பதிகள் எஸ்.ஏ. நசீர் மற்றும் பி.எஸ். நரசிம்மா  ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை  விசாரித்தது. அப்போது 4 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்றும் உத்தராகண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அதிரடியாக இடைக் காலத் தடை விதித்தது. 

''50 ஆயிரம் மக்களை ஒரே இரவில் வெளியேற்ற முடியாது. அந்த நிலத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை என்றாலும், அவர்களை வகைப்படுத்த வேண் டும். ரயில்வே-க்கு அந்த நிலம் அவசியம் எனில், பொது மக்களுக்கு மாற்று இடம் அளிக்கப்பட வேண்டும். 

இந்த விவகாரத்தை மனிதா பிமானத்தோடு அணுக வேண்டும். இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்’’ என தெரிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அடுத்தகட்ட விசாரணையை வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

No comments:

Post a Comment