கருநாடகா சந்தி சிரிக்கும் ஊழல் விவகாரம் லஞ்சம் கொடுக்க சட்டமன்றத்திற்கே 10 லட்சத்திற்கும் மேல் கத்தை கத்தையாக பையில் போட்டுக் கொண்டு வந்த உயரதிகாரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

கருநாடகா சந்தி சிரிக்கும் ஊழல் விவகாரம் லஞ்சம் கொடுக்க சட்டமன்றத்திற்கே 10 லட்சத்திற்கும் மேல் கத்தை கத்தையாக பையில் போட்டுக் கொண்டு வந்த உயரதிகாரி

பெங்களூரு, ஜன.7  பெங்களூருவில் உள்ள கருநாடக சட்டமன்ற வளா கத்துக்குள் வந்த நபரின் பைகளைப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, அவர் கொண்டு வந்த பையில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது. அதில் மொத்தம் ரூ.10லு லட்சம் பணம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் ஜெகதீஸ் என்பதும், மண்டியாவில் பொதுப்பணித் துறையில்  பணியாற்றி வருவதும் தெரியவந்தது.  ரூ.10லு லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு கருநாடக சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத் தியது. அவர் யாருக்கு பணம் கொடுக்க வந்தார் ஏன் வந்தார் என்று விசாரணை செய்துவரு கின்றனர்

 கருநாடகாவில் அமைச்சர்கள் எல்லா பணிகளிலும் 40 விழுக்காடு கையூட்டு வாங்குகின்றனர். ஓர் ஒப்பந்தம் வேண்டுமென்றால் 40 விழுக்காடு அந்த கட்டணத்தை முன்பணமாக செலுத்தவேண்டும் இல்லை என்றால் அந்த ஒப்பந்தம் கிடைக்காது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு பேசிஎம் என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர் கருநாடக முதலமைச்சர் பொம்மையின் உருவம் பதித்த சுவரொட்டியில் 40 விழுக்காடு சிஎம் என்று எழுதி இருந்தது, இதனை காவல்துறையினர் தொடர்ந்து கிழிக்க கிழிக்க அந்த சுவரொட்டிகளை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஒட்டி கொண்டே வந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.   புத்தாண்டு அன்று கருநாடக பாஜக சட்டமன்ற உறுப் பினர் ஒருவருக்கு முன்பணமாக கையூட்டு கொடுத்தபிறகு முழு பணத்தை கொடுக்கவேண்டும் என்று மிரட்டி அவருக்கு ஒப்பந் தத்தை வழங்காததால் தொழிலதிபர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.   மேலும் அவர் மரணத்திற்கு முன்பு எழுதிய கடிதத்தில் தனது சாவிற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருக்கு துணைபோகும் சில பாஜக பிரமுகர்கள் என்றும் எவ் வளவு பணம் கொடுத்தார். என்ப தையும் வங்கிக்கணக்கோடு விவர மாக எழுதி இருந்தது குறிப் பிடத்தக் கது இந்த நிலையில் சட்டமன்றத் திற்கே அமைச்சரிடம் பணம் தர அதிகாரிகள் கத்தை கத்தையாக பணத்தைக் கொண்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment