ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு

 புதுடில்லி,ஜன.7- பன்னாட்டளவில் இந்தியாவுக்கு வந்த விமானப் பயணி களிடம் டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கரோனா சோதனையில், இதுவரை ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டறியப்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.ஆனால், இந்த 11 வகை துணை திரிபு வைரஸ்களும் ஏற்கெனவே இந்தியாவில் கண்டறியப் பட்டவைதான் என்பதையும் அதி காரிகள் உறுதி செய்துள்ளனர்.

பன்னாட்டளவில் இந்தியாவுக்கு வருகைதந்த பயணிகள் 19,227 பேரிடம் கரோனா சோதனை செய்யப்பட்டதில், 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டது. இவர்கள் அனைவரும் தனி மைப்படுத்தப்பட்டனர். இந்த 124 பேரில் கரோனா மரபணு வரிசைமுறை சோதனை செய்யப்பட்ட 40 மாதிரிகளில் 14 பேருக்கு எக்ஸ்பிபி, எக்ஸ்பிபி.1 வைரஸ் பாதிப்பும், ஒருவருக்கு பிஎஃப் 7.4.1  வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட் டுள்ளது.

இந்த நிலையில், ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், மக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம் என்றும், ஆனால், அரசு வழிகாட்டுதல் படி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment