'விடுதலை' ஆயுள் சந்தாக்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

'விடுதலை' ஆயுள் சந்தாக்கள் வழங்கல்

 மேனாள் அமைச்சர் க.சுந்தரம் அவர்களின், பேத்தியும் மீஞ்சூர் நகர திராவிட முன்னேற்ற கழக செயலாளர் சு.தமிழ் உதயத்தின் மகளுமான திராவிடச்செல்வி பிறந்தநாள் மகிழ்வாக  விடுதலை வாழ்நாள் சந்தா தொகை ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் புழல்.ஆனந்தன், பொன்னேரி நகரத் தலைவர் அருள், டாக்டர் இராதாகிருட்டிணன், தமிழ்நாடு பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் முனைவர் வே.இரா.காத்தவராயன். 

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன்  விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமனிடம்  வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் ,மேனாள் மாவட்டச் செயலாளர் இரா.இரமேசு.

 சோழவரம் ஒன்றிய திமுக செயலாளர் வழக்குரைஞர் வழுதி கைமேடு நா.செல்வ சேகரன்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செய லாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம் மற்றும் பொன்னேரி வே.அருள். 

செங்குன்றம் பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழரசிகுமார்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். 

உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம் மாவட்டத் தலைவர் புழல்.ஆனந்தன், திமுக பேச்சாளர் செங்குன்றம் திராவிடமணி. 


No comments:

Post a Comment