புதுச்சேரி : பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

புதுச்சேரி : பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் எதிர்ப்பு

புதுச்சேரி,நவ.5- பொருளாதாரத்தில் பின்தங்கியோ ருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளன.

மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளைச் சேர்ந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக துணை அமைப்பாளர் கென்னடி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேவபொழிலன் மற்றும் அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப்பினர், புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்க சாமியை கூட்டாக சந்தித்தனர். அப்போது, யூடிசி தேர் விலும், அரசு வேலை வாய்ப்பிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடை நடைமுறைப் படுத்தக் கூடாது என வலி யுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.

காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மனுவில் கையெழுத்திட்டிருந்தனர். இதையடுத்து அரசு செயலரை அழைத்து முதல்வர் ரங்கசாமி பேசினார். இதைத் தொடர்ந்து மக்களவை எம்பி வைத்திலிங்கம் அலுவல கத்துக்கு மதச்சார்பற்ற கட்சியினர் வந்தனர்.

அங்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீம் கூறுகையில், "பொதுப்பட்டியலில் இருந்து பொருளா தாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வில்லை. அந்தந்த மாநிலமே இதனை முடிவு செய்யலாம். புதுச்சேரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான தரவுகள் ஏதும் இல்லை. அதனால் இம்முறையை அமல்படுத்தப்படுத்தக் கூடாது. சமூக நீதியை பாதுகாக்கவேண்டும் என்று குறிப்பிட்டோம். யூடிசி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் உறுதி தந்துள்ளார். அரசின் செயல்பாட்டைப் பொறுத்து அடுத்தக்கட்ட செயல் பாட்டை முடிவு எடுப்போம்" என்று குறிப்பிட்டார்.

பீகாருக்கு சிறப்புத் தகுதி அளிக்காதது ஏன்?

முதலமைச்சர் நிதிஷ்குமார் கேள்வி

பாட்னா, நவ.5 பீகாருக்கு சிறப்புத் தகுதி கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற வில்லை என்று நிதிஷ்குமார் சாடினார். 

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தனது அய்க்கிய ஜனதா தளம் கட்சியை விலக்கிக் கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி யுடன் கரம் கோர்த்து புதிய அரசை சமீபத்தில் அமைத்தார். 2024-ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி களை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து முயற்சித்து வருகிறார். பீகாருக்கு சிறப்புத் தகுதி வழங்க வேண்டும் என்று அவர் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் கோரி வருகிறார். இந்த நிலையில் பாட்னாவில் தனது அலுவலகத்தில், 200 உருது மொழிபெயர்ப்பாளர் களுக்கும், சுருக்கெழுத்தர்களுக்கும் பணி நியமன உத்த ரவுகளை வழங்கி அவர் பேசினார். அப்போது அவர் ஒன்றிய பா.ஜ.க. அரசை வெகுவாக சாடினார். இதுபற்றி அவர் கூறியதாவது:- 

பீகாருக்கு சிறப்புத் தகுதி என்ற கோரிக்கை நீண்ட நெடுங் காலமாக நிலுவையில்தான் உள்ளது. அது ஒன்றிய அரசால் நிறைவேற்றப்படவில்லை. எல்லா ஏழை மாநிலங்களுக்கும் சிறப்புத் தகுதி தரப்பட வேண் டும் என்ற கோரிக்கை ஏற்கப் படவில்லை. ஏழை மாநிலங் களில் பயனுள்ள ஏதாவது நடக்கிறதா? வெறும் பிரச்சாரம் மட்டுமே நடக்கிறது. எங்கள் அரசு சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத் துக்காக அதிலும் குறிப்பாக சிறு பான்மையினர் மற்றும் தாழ்த் தப்பட்ட மக்களின் முன்னேற்றத் துக்காக உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் சாடினார்.

சீனாவில் கரோனா : பொது முடக்கம் தொடர்கிறது

பெய்ஜிங்,நவ.5- சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் கரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. இதுவரை லட்சக்கணக்கான பொதுமக்கள் கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் கடந்தசில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 3.11.2022 அன்று 3,800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குவாங்சூ, ஜெங்சூ, மங்கோலியா பகுதி, ஜின்ஜியாங் உள்ளிட்ட மாகாணங்களிலும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment