‘ஆன்லைன்' விளையாட்டுக்கு அவசர தடை சட்டம்: வழக்குகள் தள்ளுபடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

‘ஆன்லைன்' விளையாட்டுக்கு அவசர தடை சட்டம்: வழக்குகள் தள்ளுபடி

சென்னை, நவ 18- ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து தொட ரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளு படி செய்து உயர் நீதிமன் றம் உத்தர விட்டுள்ளது.  

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட் டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும் ஆன்லைனில் விளையாட்டுகளை நடத்திவரும் தனியார் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் குகளை தொடர்ந்தன. இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப் போது தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்குரை ஞர் கபில் சிபில் ஆஜராகி, 'அவசர சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அந்த சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக் கப்படவில்லை. அவசர சட்டத்துக்கு பதிலாக சட்டப்பேரவையில் சட்டமே நிறைவேற்றப் பட்டு ஆளுநரின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தொடர முடியாது' என்று வாதிட் டார்.

ஆன்லைன் விளை யாட்டு நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கு ரைஞர்கள் சி.ஆர்யமா சுந்தரம், முகுல் ரோத்தகி, சதீஷ் பராசரன் ஆகி யோர் ஆஜராகி, 'அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக் கப்படவில்லை என்றா லும், அது அமலில் உள்ள சட்டமாகத்தான் கருத வேண்டும். அவசர சட் டத்துக்கு மாற்றாக நிறை வேற்றப்பட்டுள்ள சட்டத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அந்த அவசர சட்டம் காலாவதியாகும். அவசர சட்டத்தின்படி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதால், அந்த சட்டம் அமலுக்கு வரும் தேதியில் இருந்து சில தினங்களுக்கு எந்த நட வடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அறி வுறுத்த வேண்டும்' என்று வாதிட்டனர்.

அப்போது குறுக் கிட்ட நீதிபதிகள், 'அந்த அவசர சட்டம் இன்னும் அமலுக்கு வராத நிலை யில், அதை எதிர்த்து வழக் குகளை எப்படி தொடர முடியும்?' என்று கேள்வி எழுப்பினர். அதையடுத்து மனுதாரர் கள் தரப்பில், இந்த வழக்கை வாபஸ் பெறுகி றோம். அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு புதிதாக வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகளை திரும்பபெற அனுமதித்து, தள் ளுபடி செய்து உத்தர விட்டனர்.

No comments:

Post a Comment