பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடையாளம் சாவர்க்கர் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடையாளம் சாவர்க்கர் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி

 அந்தமான் சிறையில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டு - ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவர் சாவர்க்கர்

மும்பை, நவ.18 பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடையாளம் சாவர்க்கர். அவர் அந்தமான் சிறையில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதத் தொடங்கினார் என்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். மகா ராட்டிராவில் அவரது நடைப்பயணம் நடை பெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன் தினம் (16.11.2022) வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, சாவர்க் கரை பற்றி கடுமையாக தாக்கிப் பேசினார். 

அப்போது அவர், ‘‘சாவர்க்கர் பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடையாளம். அவர் அந்தமான் சிறையில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுத தொடங்கினார். சாவர்க்கர் தன்னைப்பற்றி வேறு ஒருவரின் பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், தான் வீரமிக்கவர் எனக் கூறியுள்ளார். அவர் ஆங்கிலேய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர்களுக்காக வேலை செய்தார். காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்தார்'' என்று பேசினார். 

சாவர்க்கர் மராட்டியத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில் ராகுல்காந்தியின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சாவர்க்கரை அவமதித்த ராகுல்காந்தியின் நடைப்பயணம் மகாராட்டிராவில் நிறுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சியைச் சேர்ந்த எம்.பி. ராகுல் செவாலே அரசை வலியுறுத்தினார். 

இந்த நிலையில் நேற்று (17.11.2022) ராகுல்காந்தியின் நடைப்பயணம் 71 ஆவது நாளாக நடந்தது. மகாராட்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் அவர் நடைப் பயணத்தைத் தொடர்ந்தார். 

நடைப்பயணத்துக்கு மத்தியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி அளித்தார். 

அப்போது சாவர்க்கர் மீது அவர் மீண்டும் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தை செய்தி யாளர்களிடம் ராகுல்காந்தி காண்பித்தார். 

‘‘உங்களுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக இருக்க நான் கெஞ்சுகிறேன்'' என்று கடைசி வரியில் சாவர்க்கர் குறிப்பிட்டு இருப்பதை ராகுல்காந்தி படித்துக் காட்டினார். 

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

நான் சாவர்க்கரை பற்றி கூறிய கருத்து களை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். பயம் காரணமாகத் தான் சாவர்க்கர் கருணை கடிதத்தை எழுதினார். மேலும் அவர் ஆங் கிலேய அரசுக்கு உதவியது தெளிவாகிறது. இது காந்தியார், சர்தார் வல்லபாய் படேல், நேரு போன்ற சுதந்திர போராட்டத் தியாகி களுக்கு அவர் செய்த துரோகம். சிலர் எனது நடைப்பயணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். வேண்டுமென்றால் எனது நடைப்பயணத்தை மகாராட்டிரா அரசு நிறுத்திப் பார்க்கட்டும். 

இவ்வாறு ராகுல்காந்தி செய்தியாளர்களி டையே கூறினார்.

No comments:

Post a Comment