கூட்டு பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்த நீதிமன்றம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

கூட்டு பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்த நீதிமன்றம்!

   'தோற்றுவிட்டேன்' என்று அழுத கிரண் நெகியின் தாய்

புதுடில்லி, நவ 12 உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் நேகி - பாலியல் வன்முறை மற்றும் கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றம் (9.11.2022) விடுதலை செய்தது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான கிரண் நேகி பணி முடித்து திரும்பும் போது மூன்று இளைஞர்களால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை அரியானா மாநிலத்தில் உள்ள டில்லியின் புறநகர் பகுதியில் வீசியதோடு கிரணின் கண்கள் மற்றும் காதுகளில் ஆசிட் ஊற்றப்பட்டது. அவரது கண்கள் ஸ்க்ரூடிரைவரால் துளைக்கப்பட்டன. பிறப்புறுப்பில் மது பாட்டில் செருகப் பட்டு பாட்டில் உடைக்கப்பட்டது. இந்த கொடூர கொலைக்கு காரணமான ராகுல், ரவி மற்றும் வினோத் ஆகிய 3 பேர் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கீழமை நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் ஆகியவற்றில் இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணைக்குப் பிறகு இவர்கள் மூவருக்கும் விடுதலை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் தனது 10 ஆண்டுகால சட்டப் போராட்டம் தோல்வியடைந் ததை தாங்கமுடியாமல் கதறி அழுத கிரண் நேகியின் தாயார் மகேஸ்வரி நேகி நீதிமன்ற வளாகத்தில் போராட் டம் நடத்தினார். எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை உடைந்து போனது என்று கூறி அவர் கதறி அழுதது அனைவரை யும் சோகத்தில் ஆழ்த்தியது.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமஉரிமை பற்றி பேசும் பாஜக ஆட் சியின் லட்சணம் இதுதானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருவதோடு நீதிமன்றத்தின் செயல்பாடு ஏமாற் றம் அளிப்பதாக உள்ளது என்று கூறி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ஒருகாலத்தில் நிர்பயா   போன்ற பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக ஒட்டு மொத்த இந்தியாவே மெழுகு வர்த்தி ஏந்திப் போராட்டம் நடத் திய நிலையில் தற்போது மதத்தின் பார்வையில் குறிப்பிட்ட மதத்தினர் குற்றவாளிகளாக இருந்தால் அவர் களுக்கு விசாரணையின்றி தண் டனை கொடுப்பதையும் அவர்கள் வீடு புல்டோசரால் இடிக்கப்படு வதையும் கண்டு ரசிக்கும் மன நிலைக்கு வந்து விட்டார்கள். அதே நேரத்தில் கொடூர குற்றவாளிகள் பெரும்பான்மை மதத்தவராக இருந்தால் அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் கொடுத்து அவர் களுக்கு மாலைபோட்டு மரியாதை செய்யும் மனநிலைக்கு 8 ஆண்டுகளில் மக்கள் மாறிவிட்டனர்

No comments:

Post a Comment