பாப்பாரப்பட்டி நகர திராவிடர் கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

பாப்பாரப்பட்டி நகர திராவிடர் கழக கலந்துரையாடல்

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 08-11-2022 பிற்பகல் 2.00 மணிக்கு  நடைபெற்றது. வருகின்ற 26 ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்ஆசிரியரால் அறிவிக்கப்பட்டுள்ள  நவம்பர் 26 சட்ட எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் நடத்துமாறு மாவட்ட திராவிடர் கழகம் பாப்பாரப்பட்டி நகரக் கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.  இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர். புலவர் வேட்ராயன் தலைமையேற்றார். மாவட்டத் தலைவர் வீ. சிவாஜி முன்னிலையில் மேனாள் மாவட்ட தலைவர் இ.மாதன் தருமபுரி விடுதலை வாசகர் வட்ட  தலைவர் க. சின்னராஜ் பாப்பாரப்பட்டி நகர தலைவர் ம. சுந்தரம், பாப்பாரப்பட்டி நகர செயலாளர் மு.வினோபாஜி, நகர அமைப்பாளர்  கே.நரசிம்மன், கணேசன் கலந்து கொண்டு கூட்டம் நடத்த  ஏற்பாடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment