ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உச்சநீதிமன்றத்தின் ணிகீஷி தீர்ப்பு: ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்வது ஏன்? இது ஓர் எதிர்விளைவு நடவடிக்கையாகும் என பேராசிரி யர் கிறிஸ்டபர் ஜாப்ரலெட் உள்ளிட்ட கட்டுரையாளர்கள் கருத்து.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழ்நாட்டில் 50% சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை ஒதுக்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாநில அரசு மற்றும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் அளிக்க பத்து நாட்கள் அவகாசம் அளித்தது.

தி இந்து:

* ஆளுநர் அரசமைப்பின் கீழ் இருக்கிறார், அதற்கு மேல் இல்லை. குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அரசமைப்பிலிருந்து விலகிச் செல்வ தால், ஆளுநரின் பங்கு, அதிகாரங்கள் மற்றும் கடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் 20ஆம் நூற்றாண்டின் அர சியல் நிர்ணய சபை விவாதங் களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கருத்து.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment