உடற்பயிற்சியின் முக்கியத்துவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

உடற்பயிற்சி உடல் ஆரோக்கி யத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப் பாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல்நலத் துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. 

சில உடற்பயிற்சிகள் மன நலனுக் காகவும் பயன்படுகிறது. ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று காலை உடற்பயிற்சி, மூளையின் செயல் திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளை யின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வய துக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத் திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.

தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாக வும் இருக்கும். மேலும் மன நிலையை யும் நன்றாக வைக்க உதவுகிறது.புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம். குறிப் பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மன நோய் ஏற்பட்டாலும், அதை தடுக் கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு. உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பதற்றத்தின் அளவு கட்டுப் பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும்.

உடற்பயிற்சியை தடையில்லாமல் பின் தொடர்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம். எளிமையாக தொடங்குங்கள்: ஒரே நாளில் உடற்பயிற்சியில் சிறந்த நிலையை எட்ட முடியாது. ஆரம்பத்தி லேயே கடினமான உடற்பயிற்சியை தேர்ந் தெடுத்தால் சோர்வடைந்துவிடு வீர்கள். உடலில் நீரிழப்பும் ஏற்படும். எனவே ஆரம்பத்தில் எளிமையான பயிற்சியை தொடருங்கள். அரை மணி நேரம் விறுவிறுப்பாக நடப்பது, 15 நிமிடம் நடனம் ஆடுவது அல்லது பழங்கால இயற்கைவழி உடற்பயிற்சி களை மேற்கொள்வது போன்ற பயிற்சி களில் ஈடுபடலாம். அதன் பிறகு உடற் பயிற்சியை தொடங்கலாம். நீண்ட நாட்கள் உடற்பயிற்சி செய்து வருபவர் களும் இடையில் நிறுத்தியவர்களும் கூட இந்த முயற்சியை பின் தொட ரலாம்.

ஒரே விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை சலிப்பை ஏற்படுத்திவிடும். ஏரோபிக்ஸ் பயிற்சிகள், உடல் வலி மையை அதிகரிக்கச் செய்யும் பயிற்சி கள் என வெவ்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். 

உடற்பயிற்சியை தவிர்ப்பதற்கு நேரமின்மையை பலர் காரணமாக முன்வைக்கிறார்கள். அன்றாடம் செய் யும் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவது போல உடற்பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். உடற் பயிற்சிக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினால், மற்ற விஷயங் களுக்கு தானாகவே நேரம் கிடைத்து விடும். ஏனெனில் உடற்பயிற்சி செய் வதால் மந்த உணர்வு நீங்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்து விட முடியும். நண்பர்களையும் சேர்த் துக் கொள்ளுங்கள்: தனிமையில் உடற்பயிற்சி செய்வது சில காலத்திற்கு பிறகு சலிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும். நண்பர்களுடன் சேர்ந்து குழு வாக உடற்பயிற்சி செய்வது கூடுதல் நன்மைகளை தரும். உடற்பயிற்சி செய்வதை குறிக்கோளாக கடைப் பிடிக்க தொடங்கிவிடுவீர்கள். அவர்க ளுடன் சேர்ந்து புதிய உடற் பயிற்சி களையும் முயற்சிக்க பழகிவிடுவீர்கள். சத்தான உணவை உண்ணுங்கள்: உடல் நலத்துக்கு உடற்பயிற்சி முக்கிய மானது, அதுபோல் உணவும் அவசிய மானது. எனவே, உடற்பயிற்சி செய்ய தொடங்கும்போது, உணவிலும் கவ னம் செலுத்துங்கள். பருவகால பழங் கள் மற்றும் காய்கறிகளுடன் சமச் சீரான உணவை உண்ணுங்கள். போது மான தண்ணீர் குடிப்பதும் ஆரோக் கியத்திற்கு உகந்தது. தினமும் குறைந் தது எட்டு டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு 'வார்ம் அப்' பயிற்சியை தவறாமல் மேற்கொள் ளுங்கள். உடற் பயிற்சி செய்து முடித்த பிறகு போதிய ஓய்வு எடுக்கவும் மறக் காதீர்கள்.

No comments:

Post a Comment