பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 43ஆவது விளையாட்டு தின விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 43ஆவது விளையாட்டு தின விழா

திருச்சி, நவ. 2- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் 43ஆவது ஆண்டு விளையாட்டு விழா 29.10.2022 அன்று காலை 08.00 மணியளவில் பள்ளியின் என்.எஸ்.கே. கலை வாணர் அரங்கில் பள்ளி தாளாளர் வீ.அன்புராஜ் அவர்களின் வாழ்த் துகளுடன், பள்ளி முதல்வர் டாக்டர் மு. வனிதா தலைமையேற்க, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மற்றும் இணைய வழி கல்வி இயக்குநரும்,  உடற்கல்வி மற்றும் யோகாத் துறை பேராசிரியருமான முனைவர். யு.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  பெரியார் கல்வி நிறுவனங்களின் தலைமையாசிரியர், முதல்வர்கள் முன்னிலையில் மொழி வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.

சிறப்பு விருந்தினர் முனைவர். யு.பழனிச்சாமி  தேசிய கொடியேற்று  விழாவிற்கு வருகை புரிந்தோரை பள்ளியின் மாணவர் தலைவர் ம.அமுதவேங்கை  வரவேற்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மழலையரின் உடற்பயிற்சிகள், பிரமிடு, சிலம்பம், டேக் வோண்டோ, மாணவர்களின் தொடர்ஓட்டப் பந்தய விளையாட்டுப் போட்டிகள், மழலையர்களின் கண்கவரும் நடை, யோகா பயிற்சிகள் காண்பவர் கண்களையும். கருத்தினையும் கவர்ந்தன.  பல்திறன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களும் மற்றும் சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்;டது.

சிறப்பு விருந்தினர் தம் உரையில் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய - மனமும், உடலும் ஒருங்கிணைக்கும் விளையாட்டை மாணவர்கள் விளையாடுவதற்கு பெற்றோரும் அனுமதி அளிக்க வேண்டும். மாணவர்கள் விரும்பும் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும.; வெற்றி வாகை சூடுவதை விட பங்கு கொள்வது சிறப்பு.  “மனஅழுத்தத்தை போக்கி புத்துணர்ச்சியை ஊட் டும் விளையாட்டைப் போற்றுவோம்” என்னும் கருத்துகளை மாணவர் களுக்கு வழங்கினார்.   அனைத்து வகுப்பு மாணவர்களையும் விளை யாட்டில் பங்குபெற செய்ததை கண்டு வியந்து பாராட்டினார்.

விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் போட்டிகள் வைத்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் அனைத்து போட்டிகளிலும் வென்று வாகை சூடி முதலிடம்  பிடித்த மஞ்சள் நிற அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த நீல நிற  அணிக்கும் மூன்றாம் இடம் பிடித்த பச்சை நிற  அணிக்கும், நான்காம் இடம் பிடித்த சிவப்பு நிற அணிக்கும் சுழல் கோப்பைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

விழா நிகழ்வுகளை பள்ளியின் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

நிறைவாக, பள்ளியின் விளையாட்டு அணி செயலர் மாணவி ர.சுப்ரஜா நன்றி நவில, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.



No comments:

Post a Comment