ஒசூரில் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

ஒசூரில் ஆர்ப்பாட்டம்

ஓசூர், நவ.16 தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து சிங்கள கடற்படை யால் தாக்கப்படு வதை கண்டித்து 13-11-2022, காலை 10.00 க்கு, ஓசூர் ராம்நகரில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்  கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசை வலியுறுத்தி, கைது செய்யப் பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், சிங்கள அரசு வசம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகு களையும் மீட்க உட னடி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எல்லைகளை அறிந்து கொள்ளும் வகையில் நவீன மிதவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மீனவர் பாதுகாப்பு படையை தமிழ்நாடு அரசு உடனடியாக உருவாக்கி மீனவர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் முழக்கம் இடப் பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர். விக்னேஷ் (மாவட்டச் செயலாளர்), தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்   தலைமை தாங்கினார்.

திராவிடர் கழகம் சார்பில் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்,

சந்தோஷ் (மாவட்டச் செயலாளர் தமிழகத் தொழிலாளர் முன்னணி).

ராமமூர்த்தி (மாவட்டச் செயலாளர் இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்கம்). 

செல்வா (மாவட்டச் செயலாளர் தமிழக மாணவர் இயக்கம்).

கவிஞர். கோபிகிருஷ்ணன் (மாவட் டக் குழு உறுப்பினர் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்).

இராமச்சந்திரன் (மேற்கு மாவட்டத் தொகுதிச் செயலாளர் விடுதலை சிறுத் தைகள் கட்சி). 

சங்கர் (பொருளாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி). 

வேலாயுதம் (செயலாளர் தமிழ் மைந்தர் மன்றம்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 

இறுதியாக தோழர். கவுதம் நன்றி உரையாற்றினார்.

No comments:

Post a Comment