செப்.7இல் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் மராட்டிய மாநிலத்தை அடைந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

செப்.7இல் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் மராட்டிய மாநிலத்தை அடைந்தது

அய்தராபாத்,நவ.8- காங்கிரஸ் மேனாள் தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின்  இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த செப் டம்பர் 7-ஆம் தேதி கன்னியா குமரியில் திமுக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு, கேரளா, கருநாடகா மற்றும் ஆந்திராவில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கடந்த 24ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தை அடைந்தார். தெலங்கானாவில் 3 நாள் ஓய்வு நீங்கலாக 12 நாட்கள் அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். 

இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று (7.11.2022) மாலையில் தெலங்கானாவின் கமரெட்டி மாவட்டம் வழியாக மராட்டிய மாநில எல்லையை அடைந்தார். அப்போது இரு மாநில எல்லை யில் தேசியக் கொடியை மராட் டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலிடம் தெலங் கானா மாநில காங்கிரஸ் தலை வர் ரேவந்த் ரெட்டி ஒப்படைத் தார். முன்னதாக, நடைபயணம் மேற்கொண்டுள்ளவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் பொதுக் கூட்டம் மெனூரு கிராமத்தில் நடைபெற்றது. மாநில காங் கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறும்போது, “தெலங்கானாவில் இந்திய ஒற்றுமை நடைப் பயணம், மக்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள் ளது. விவசாயிகள், தொழிலா ளர்கள், அறிவுஜீவிகள் என அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்று ராகுல் காந்திக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்” என்றார்.


No comments:

Post a Comment