பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் வரக்கூடாது வாக்காளர்களுக்கு பிரியங்கா எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் வரக்கூடாது வாக்காளர்களுக்கு பிரியங்கா எச்சரிக்கை!

சிம்லா, நவ 8 இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும், மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி வரக்கூடாது என்றும் பிரியங்கா வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.  இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலத்தில் உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வருகிறது. ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர் களுக்கு ஆதரவாக தீவிர களப்பணியாற்றி வருகின்றன. அந்தவகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று (7.11.2022) மாநிலத்தில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். உனா மாவட்டத்தின் காங்கர் கிரா மத்தில் நடந்த பிரசார கூட்டத் தில் அவர் பேசும்போது கூறிய தாவது:- 

பா.ஜனதா கட்சி கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் வழிப்பறி செய்து வருகிறது. எந்த வளமும் மாநிலத்தில் மீதமில்லை, அனைத்தும் பெரிய தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.எனவே பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் பா.ஜனதா வுக்கு ஓட்டளித்து தவறிழைத் தால், பின்னர் வருந்த நேரிடும்.

இமாச்சலப் பிரதேசத்தை நலிந்த மாநிலம் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆனால் இது அனைத்தும் வாக் குகளை பெறுவதற்கான நாட கமே. எந்த விலை கொடுத்தேனும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதே பா.ஜனதாவின் ஒரே லட்சியம். ஆனால் ஆட்சியில் இருக்கும்போது ஏழைகள் மற் றும் தேவையில் இருப்போரை பா.ஜனதா மறந்து விடும். பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே அனைத்தும் வழங்கி வருகிறது. இமாச்சல பிரதேச முதல்- அமைச்சர் ஜெய்ராம் தாகூர் கடந்த 5 ஆண்டுகளாக 63 ஆயி ரம் காலியிடங்களை நிரப்ப வில்லை. ஆனால் தற்போது ஆட்சியை தொடர்வதற்காக எதையும் கூறுவார்கள். எனவே அவர்களின் போலி வாக் குறுதிகளுக்கு இரையாகி விடா தீர்கள். காங்கிரஸ் கட்சி மட் டுமே மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறது. கடந்த காலங்களில் மேற்கொண்ட அந்த பணிகள் தொடரும். எனவே மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். இந்த முறை யாருடைய ஆலோசனையை கேட்டும் வாக்களிக்காதீர்கள். நன்றாக யோசித்து சரியான நபர்களை தேர்ந்தெடுங்கள் என்று பிரியங்கா கூறினார்.


No comments:

Post a Comment