திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயற்குழுக் கூட்டம் சென்னை - பெரியார் திடலில் நடைபெற்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயற்குழுக் கூட்டம் சென்னை - பெரியார் திடலில் நடைபெற்றது

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயற் குழுக் கூட்டம் 7.11.2022 அன்று சென்னை - பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் முனைவர் பெ. ஜெகதீசன் தலைமை வகித்தார்.

ஆய்வு மய்யத்தின் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வருங்காலச் செயல்பாடுகள் எப்படி அமைந்திடல்  வேண்டும் என்பதை வழிகாட்டுதல் உரையில் குறிப்பிட்டார். திராவிடர் வரலாற்றுச் சின்னங்களை வெளிப்படுத்திய அகழாய்வு இடங்களான ஆதிச்சநல்லூர், அழகன்குளம், அரிக்கைமேடு, கொடுமணல் மற்றும் கீழடிப் பகுதிகளுக்கு ஆய்வுச் சுற்றுலாவாக சென்று வர மய்யம் ஏற்பாடு செய்திட வேண்டும். மாதம் ஒரு முறை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கருத்துரைக் கூட்டத்தினை நடத் திட வேண்டும். ஆய்வு அறிஞர்கள்  அகழாய்வு செயல்பாட்டாளர்கள், வரலாற்றுக் கல்வியாளர்கள் ஆகியோர் சிறப்புரை ஆற்றிடும் வகையில் கூட்டம் நடைபெற வேண்டும். ஆய்வுக் கட்டு ரைகள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்குரிய வல்லுநர் குழுவில் விவாதிக்கப்படலாம் என தமிழர் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் முனைவர் ந.க.மங்களமுருகேசன், முனைவர் த. ஜானகி, முனைவர் ப.இரா. அரங்க சாமி, பேராசிரியர் அ. கருணானந்தன், முனைவர் 

ஆர். சரவணன், முனைவர் எஸ். ராமு, முனைவர் 

ஆர். ஷோபா, முனைவர் ஆர். அரசு, முனைவர் 

ஜே. காஜாஷெரீப் ஆகிய வரலாற்றுப் பேராசிரியர்கள் மற்றும் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் புதிய பொறுப்பாளர்கள், செயற்குழுக் கூட்டத்தில் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

தலைவர்: முனைவர் பெ. ஜெகதீசன்

துணைத் தலைவர்கள்: முனைவர் த. ஜானகி, முனைவர் ந.க. மங்களமுருகேசன், முனைவர் 

ப.இரா. அரங்கசாமி.

செயலாளர்கள்: அ. கருணானந்தன், முனைவர் ஆர். சரவணன்.

துணைச் செயலாளர்கள்: முனைவர் ஆர். ஷோபா, முனைவர் எஸ். ராமு.

பொருளாளர்: வீ. குமரேசன்

No comments:

Post a Comment