அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகள்-ஒன்றிய அரசு அறிவிப்பு மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வருமோ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகள்-ஒன்றிய அரசு அறிவிப்பு மதுரைக்கு எய்ம்ஸ் எப்போது வருமோ?

புதுடில்லி, நவ. 14- தமிழ்நாட் டில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு அரசால் அமைக் கப்பட்டு வருகின்றன. 

ஒன்றிய பாஜக அரசு அமைந்த பின்னர்  எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத் துவமனை அமைப்பதற் கான திட்டமோ பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. மதுரை எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்ட இமாச் சலப்பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் கடநத மாதம் பிரதமர் மோடி யால் திறக்கப்பட்டுவிட் டது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் மட்டும் ஒன்றிய பாஜக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை புறக்கணித்துவிட்டு பிற இடங்களில் முக்கியத்து வம் அளித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான நடவடிக் கைக்கு  கடும் கண்டனம் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 100 மருத்துவக் கல்லூரி களை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.

நாடு முழுவதும் மருத் துவக் கல்லூரிகளை தொடங்கி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற் பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.

ஏற்கெனவே, 3 கட் டங்களாக  157 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட் டது. இதில், 93 கல்லூரி கள் செயல்பாட்டுக்கு வந்து விட்டன.  மற்ற கல்லூரிகள் கட்டப்பட்டு முடியும் நிலையில் இருக் கின்றன. இவை விரைவில் செயல்பாட்டு வரும் என தெரிகிறது. இந்நிலையில், 4ஆம் கட்டமாக  2027 ஆம் ஆண்டுக்குள்  மேலும் 100 மருத்துவக் கல்லூரி களை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான முன்மொ ழிவுக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டு இருக்கிறது. இதன்படி, அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 100 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனை கள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரிக ளாக தரம் உயர்த்தப்படும் அல்லது நிபுணர் குழு வால் பரிந்துரை செய்யப் படும் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும்.

ஒரு மருத்துவமனைக்கு ரூ.325 கோடி செலவாகும்.

ஒரு மாவட்ட மருத் துவமனை அல்லது  மருத் துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற ரூ.325 கோடி செலவாகும் என  மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் ஒன் றிய அரசு 60 சதவீத நிதி யும்,  மாநில அரசு 40 சத வீத நிதியும் வழங்குகின் றன. இந்த தொகைக்கு ஒன்றிய செலவின நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment