மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பாதையில் வெடிவிபத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் பாதையில் வெடிவிபத்து

அகமதாபாத், நவ 14-  மோடி குஜராத் தேர்தலை ஒட்டி வாக்குபெறுவதற்காக அவசர அவசரமாக வந்தே பாரத் என்ற பெயரில் ஏற்கனவே ஓடிக்கொண்டு இருந்த சதாப்தி  (பெருநகரங்களை இணைக்கும் விரைவு ரயில்) பெயர் மற்றும் ரயில் இஞ்சினின் முன் தோற்றத்தைமட்டும் கொஞ்சம் மாற்றி வந்தே பாரத் என்ற பெயரோடு ஓடவிட்டார். 

அவர் ஓடவிட்ட பிறகு வந்தே பாரத் ரயில் தொடர்ந்து மாடுமோதி விபத்து, சக்கரம் கழண்டு விபத்து தரைமேடையில் உரசி விபத்து என்றே ஓடிக் கொண்டு இருக்கிறது. 

இந்த நிலையில் குஜ ராத் மாநிலம் அகமதா பத்தில் இருந்து ராஜஸ் தானின் உதய்ப்பூர் நகரை இணைக்கும் வந்தே பாரத் ரயிலை அக்டோபர் 31 ஆம் தேதி கொடி அசைத்து அனுப்பிவைத் தார். இந்த ரயில்  உதய்பூர் நோக்கி சென்று கொண் டிருந்த போது, உதய்பூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, உதய் பூர் நோக்கி வந்து கொண் டிருந்த ரயில் துங்கர்பூரி லேயே நிறுத்தப்பட்டது. குண்டு வெடிப்பால் தண் டவாளத்தில் விரிசல் ஏற் பட்டது. இதையடுத்து, என்.அய்.ஏ மற்றும் ஆர் பிஎப் புலனாய்வு அமைப் புகள் சோதனையில் ஈடு பட்டனர். மேலும், ரயில்வே பாதையில் இருந்து சக்தி வாய்ந்த வெடிப்பொருட் கள் கண்டறியப்பட்டுள் ளது. இந்த சதி திட்டத் திற்கு பின்னால் தீவிர வாதிகள் உள்ளனரா? என்ற கோணத்தில் விசா ரணை தீவிரமாக்கப் பட்டுள்ளது. உதய்பூரில் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி ஜி20 மாநாடு தொடர்பான உலக நாட்டு தலைவர்களின் பிரதிநிதிகள் பங்குபெறும் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், இந்த சதித் திட்டம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குஜ ராத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைப்பது கடினம் என்ற நிலையில் ரயில் பாதையில் குண்டுவெடிப்பு பற்றிய செய்தியை பர பரப்பாக்கி இதன் மூலம் வாக்குகளை அறுவடை செய்ய பாஜக முனைந்து வருகிறது என்று விமர்ச னம் செய்துவருகின்ற னர்.

No comments:

Post a Comment