தமிழர் தலைவர் பிறந்தநாள் ‘டிசம்பர் 2 சுயமரியாதை நாளை' முன்னிட்டு மாவட்டந்தோறும் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

தமிழர் தலைவர் பிறந்தநாள் ‘டிசம்பர் 2 சுயமரியாதை நாளை' முன்னிட்டு மாவட்டந்தோறும் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள்!

மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

மயிலாடுதுறை, நவ.8 மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 3.11.2022 வியாழன் மாலை 4 மணி அளவில் மயிலாடுதுறை கூறைநாடு மாவட்ட அலு வலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்ற கலந் துரையாடல் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், அமைப்பாளர் ஞான.வள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தனது உரையில், மயிலாடுதுறை சிறிய மாவட் டம் என்ற போதிலும் விடுதலை சந்தா சேமிப்பு மற்றும் பெரியார் ஆயிரம் விணா விடை நிகழ்வுகளில் சிறப்பாக பங்காற்றியதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கூறியதோடு தமிழர் தலைவர் இந்த மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ள விடுதலை சந்தா இலக்கினை டிச 2 ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இது கழக துணைத்தலைவர் கவிஞர் பிறந்த மாவட்டம். மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்றார்.

தமிழர்தலைவர் பிறந்தநாள் டிசம்பர் 2 சுயமரியாதை நாளை முன்னிட்டு மாவட்டம் தோன்றும் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கு களை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பின் தோழர்களின் வேண்டுகோளுக் கிணங்க தனது மலேசியா, குவைத் பிரச்சார சுற்றுப்பயண நிகழ்வை சுருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கள் கருத்தினை தெரிவிக்க நகர தலைவர் சீனி.முத்து நன்றி கூறினார்.

தோழர்களுக்கு தேநீர் விருந்து அளிக் கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கூட்டம் நிறைவுபெற்றது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1:

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட விடுதலை சந்தா இலக்கினை விரைந்து முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது  

தீர்மானம் 2:

தமிழர் தலைவர் பிறந்த நாளாம் 

டிசம்பர் 2 சுயமரியாதை நாளை முன்னிட்டு மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் கருத்தரங் குகளை சிறப்பாக நடத்துவது என்றும் பெரியார் 1000 பரிசளிப்பு நிகழ்ச்சிகளை பள்ளிகள் தோறும் சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது

தீர்மானம் 3:

பகுத்தறிவாளர் கழகம், மற்றும் விடுதலை வாசகர் வட்டம் இணைந்து மாதாந்திர கருத் தரங்குகளை நமது அலுவலகத்தில் மீண்டும் தொடர்ந்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

புதிய பொறுப்பாளர் நியமனம்

மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவராக க.அருள்தாஸ் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.


No comments:

Post a Comment