இந்தியா வளர 10 ஆயிரம் அம்பானி, 20 ஆயிரம் அதானிகள் தேவையாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

இந்தியா வளர 10 ஆயிரம் அம்பானி, 20 ஆயிரம் அதானிகள் தேவையாம்!

 கூறுகிறார் ‘நிட்டி ஆயோக்’ சி.இ.ஓ. அமிதாப் கந்த்

புதுடில்லி, நவ.12 இந்தியா வளர்ச்சி அடைய வேண்டுமானால், ஒரு அம்பானி, அதானி போதாது... இன்னும் 10 ஆயிரம் அம்பானி, 

20 ஆயிரம் அதானிகள் உருவாக வேண்டும் என்று ‘நிட்டி ஆயோக்’ தலைமை  செயல் அதிகாரியும், ‘ஜி20’ மாநாட்டின் தலைவருமான அமிதாப் கந்த் பேசியுள்ளார்.

‘ஜி20’ அமைப்பு கடந்த  1999ஆம்  ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, அய் ரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந் தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா, தென்  கொரியா, மெக்சிகோ, இத் தாலி,  இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனே சியாவிடம் உள்ள நிலையில், டிசம்பர் 1 முதல் ‘ஜி20’ அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள் ளது. இதையொட்டி நடைபெறும் மாநாட்டிற்கான இலச்சினை (லோகோ), கருப்பொருள் ஆகிய வற்றை பிரதமர் மோடி 8.11.2022 அன்று வெளியிட்டார்.

 ‘ஜி20’ மாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ‘நிட்டி ஆயோக்’கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த், தொழில் துறையினர் உடனான கலந்துரை யாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அப்போது, “10,000 அம்பானி களும், 20,000 அதானிகளும் இருந் தால் மட்டுமே இந்தியா வளரும். எனவே உங்கள்  துறையில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற ‘ஜி20’ வாய்ப்பை நீங்கள் (முதலாளிகள்) பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

“’ஜி20’ தலைவர்  பதவியை வைத் திருப்பது வணிகங்களில் ஈடுபட ஒரு மிகப்பெரிய  வாய்ப்பு; இது உங் களுக்கு இனி ஒருபோதும் கிடைக் காத வாய்ப்பு” என்றும் உசுப்பேற்றி யுள்ளார். மேலும், “உலகளாவிய விநியோகச் சங்கிலியில் குறிப்பிடத் தக்க பங்கை வகிக்க இது ஒரு  வாய்ப்பு. உலகத் தலைவர்களால் கொள்கைகள் அமைக்கப்படு கின்றன. நமது கட்டமைப்பு உலகத் தலைவர்களால் கட்டமைக்கப்பட் டுள்ளது. நாடு ஒரு சிறந்த  உற்பத்தி சக்தியாக மாற வேண்டுமானால் வணிகங்கள் விரிவடைந்து செழிக்க வேண்டும். நீங் கள் (முதலாளிகள்) வளர்ச்சியடையாமல் இந்தியா வளர்ச்சி அடையாது. 30 முதல் 40 விழுக்காடு என்ற விகிதத்தில் வளர்ச்சியடைய வேண்டுமானால், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 9 முதல் 10 விழுக்காடாக வளர்ச்சி  விகிதம் இருக்க வேண்டும். இது  நாட்டின் முன்பு இருக்கும் சவால்.  தனியார் துறையை விரிவுபடுத்தாமல் இவை அனைத்தையும் சாத்தியப்படுத் துவது அரசால் மட்டும்  முடியாது. ‘ஜி20’ என்பது அரசாங்கங்களை விட அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் (முத லாளிகள்) வளர்ச்சியடைந்து செழிக் காத வரை இந்தியா முன்னேறாது. சிறு- குறு- நடுத்தர நிறுவனங்கள்  பெரிய நிறுவனமாக வளராத வரை, பெரிய நிறுவனம் அதனைவிட பெரியதாக வளர்ச்சியடையாத வரை இந்தியா வளர்ச்சி யடையாது'' என அமிதாப் கந்த்,  முதலாளிகளை தாங்கு தாங்கு என்று தாங்கியுள்ளார்.


No comments:

Post a Comment