மோடியின் 'அரசியல் ஆயுதம்' அமலாக்கத்துறை காங்கிரஸ் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

மோடியின் 'அரசியல் ஆயுதம்' அமலாக்கத்துறை காங்கிரஸ் கண்டனம்

மும்பை, நவ.12 எதிர்க்கட்சி களை குறிவைப்பதற்கு மோடி, அமித்ஷாவின் ‘அரசியல் ஆயுதம்' அமலாக்கத்துறை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.  

மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் பிணையில் விடு தலை செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை சட்டவிரோ தமாக கைது செய்ததாக நீதி மன்றம் அதன் உத்தரவில் கூறி யது. இந்தநிலையில் மராட்டிய மாநிலம் நாந்தெட்டில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இது குறித்து செய்தியாளர்ளிடம் கூறிய தாவது:- அரசியல் ஆயுதம் மும்பை சிறப்பு நீதிமன்ற உத்தரவு மூலம் ஒன்றியபுலனாய்வு முகமை அரசியல் எதிரிகளை பயமுறுத்த, அச்சுறுத்த பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது. சஞ்சய் ராவத் பிணை உத்தரவு மூலம் அம லாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு இல்லை என்பது தெரிகிறது. அது எதிர்க்கட்சிகளை குறிவைக்க மோடி, அமித்ஷாவின் கையில் இருக்கும் அவர்களின் அரசியல் ஆயுதம். சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. பல்வேறு பிரச்சினைகளில் அவர் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக பேசுவார் என நம்பு கிறோம். கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி பா.ஜனதா   செய்கிறது. இதன் காரணமாக கூட்டுறவுத் துறையில் பலமாக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படும். காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவு துறைக்கு எந்த வரியும் விதிக்கப் படவில்லை. ஆனால் அது மோடி ஆட்சியில் மாறிவிட்டது. இவ் வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment