ஏன், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை எதிர்க்கிறோம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

ஏன், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை எதிர்க்கிறோம்?

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

வி.டி. சவர்க்கார் "ஹிந்துத்வா" என்ற தலைப்பில் எழுதியுள்ள கொள்கை விளக்க நூலில் இரண்டே வரிகளில் தங்களது வழிமுறைகளாக வன் முறைக்குப் பாயிரம் பாடியுள்ளதை எவரே மறுக்க முடியும்?

Hinduise Military

Militarise Hindus

"இராணுவத்தை ஹிந்துமயமாக்கு

ஹிந்துக்களை இராணுவப் படையாக்கு"

இதன் பொருள் - கலவரங்கள் உருவாக்க என்றும் தயாராக இரு! (1929இல்) 

அது அப்போது என்று ஒரு சமாதான மொழியே!

2007இல் டிசம்பர் 20 அன்று சில அறிவுஜீவிகளை டில்லியில் சந்தித்து, ஆர்.எஸ்.எஸ். தலைவர் இவ்வாறு விளக்கினார்!

"போலீஸ் பயிற்சிக் கையேட்டினைப் பார்த்தீர் களென்றால், ஆயுதப் பயிற்சியின் அளவு 25 சதவிகிதம்தான் இருக்கும். மீதியுள்ள 75 சதவிகிதம் பயிற்சி தான் ஸ்வயம் சேவக்குகளுக்கு மூன்றாம் ஆண்டில் கற்பிக்கப்படுகிறது. போலீஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் எங்களைச் சந்திக்கும் போது தேவைப்பட்டால் சாமான்ய மக்கள் ஆயுதப் பயன்பாட்டினைக் கற்றுக் கொள்ள 4-5 மாதங்கள் ஆகுமென்றும், ஆனால் ஸ்வயம் சேவக்குகள் - அவர்களிடம் சென்றால் 4-5 நாட்களுக்குள்ளேயே நாட்டின் எல்லைக்குச் சென்று போர் புரியும் அளவுக்கு அவர்களைத் தயார் செய்து விடுவோம்" என்கிறார்கள்.

எனவேதான் லத்தி முக்கியத்துவம் பெறுகிறது.

பக்கிம் சட்டர்ஜி இவ்வாறு சொன்னார், "ஓ, நோயுள்ளவர்களே, உங்களின் நாட்கள் முடிந்து விட்டன. பயிற்றுவிக்கப்பட்ட கைகளில் நீங்கள் கிடைத்தீர்களெனில் உங்களால், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. அதனால் தான் லத்திக் கம்புகளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி ஆர்.எஸ்.எஸ்.சில் தொடரும்".

இந்த சொற்கள் உணர்த்தும் பொருள் வெளிப் படையானது.

No comments:

Post a Comment