செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

செய்திச் சுருக்கம்

முடியாது

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.

எத்தனால்

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே வரும் ஜனவரியில் இது விற்பனைக்கு வரும் என ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்.

விரிவாக்கம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது.

கேபிள் பாலம்

கிருஷ்ணா நதி மீது ஆந்திரா - தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் விதத்தில் ரூ.1,082.56 கோடி செலவில் கேபிள் (கம்பி) பாலம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல்.


No comments:

Post a Comment