ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தெலுங்கானா முனுகோடு இடைத் தேர்தலில் எந்தக் கட்சியும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தவில்லை என பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு கண்டனம்.

* ஹிஜாப் அணியும் உரிமையை பெண்கள் முடிவு செய்யட்டும். நீதிமன்றங்கள் ஏன் தலையிட வேண்டும், தலையங்க செய்தி.

* வேலைவாய்ப்பின்மை, விலைவாசி ஏற்றம் குறித்து பிரதமர் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? ராகுல் காந்தி கேள்வி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தேவதாசி முறை இன்னமும் தொடர்வது குறித்து அறிக்கை அளித்திட, ஒன்றிய அரசுக்கும், தமிழ் நாடு உள்ளிட்ட ஆறு மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் தாக்கீது.

* திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவினை பிற மாநிலங்களிலும் துவக்க முடிவு - டி.ஆர்.பி.ராஜா.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மோடி அரசின் தோல்விகளை ஆர்.எஸ்.எஸ். தாங்கிப் பிடிப்பது சங்க பரிவாருக்குள் உள்ள கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது என அமித் மித்ரா தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மருத்துவ சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை.

தி இந்து:

* இந்திய ஊடகங்களில் 90% தலைமைப் பதவிகள் உயர் ஜாதிக் குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என ஆக்ஸ்பாம் இந்தியா-நியூஸ்லாண்ட்ரி அறிக்கை.

* உலகளாவிய பட்டினி குறியீட்டில் 121 நாடுகளில் இந்தியா 107ஆவது இடத்தில் உள்ளது என உலகளாவிய பசி குறியீடு (நிபிமி) அறிக்கை.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் அல்லது மிகவும் பின்தங்கிய வகுப்பினர் போன்ற தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் அபிலாஷைகளுக்கு அதிக இடமளிப்பது போன்ற சாத்தியமான பாடத் திருத்தம் இருக்கலாம்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசி நிகழ்ச்சி நிரல்களை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தல்; புதிய நுண்ணறிவுகளுடன், இன்னும் நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக் கீட்டை வலியுறுத்துதல், மேலும் அடித்தள  சமூகங்களில் இருந்து அதிகமான பெண் வேட்பாளர்களை நிறுத்துதல், இவையே இந்தியாவின் ஜனநாயகமயமாக்கல், மண்டல் வழி என்கிறார் கட்டுரையாளர் பேராசிரியர் அர்விந்த் குமார்.

தி டெலிகிராப்:

* மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். ஒரு மதச்சார்பற்ற தேசத்தின் தலைவருக்கு இது உரிய முறையா? என தலையங்க செய்தியில் வாசகரின் கடிதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment