ஆளுநருக்கு எடுத்துச் சொல்லுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

ஆளுநருக்கு எடுத்துச் சொல்லுங்கள்

தேசிய கீதத்தில் கூறப்பட்டுள்ள திராவிடம் என்பது தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது என்றும், அரசியல்வாதிகள் அதை சுருக்கி விட்டனர் என்றும் திருவாளர் மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திருவாய் மலர்ந்துள்ளார். 

சமீபகாலமாக அவர் இதுபோல் தன் வரம்புக்கு மீறி உண்மைக்கு மாறாகப் பேசுவது அதிகரித் துள்ளது. அவருக்கு சொல்லிக் கொடுப்பவர்களாவது சரியாக சொல்லித்தர வேண்டும்.

“திராவிடம்“ என்ற சொல் ஆளுநர் கூறுவது போல் தேசிய கீதத்தில் முதன்முதலில் சொல்லப் பட்டது அல்ல. அது ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழையும் தமிழ்நாட்டையும் குறிக்கும் சொல்லாக அமைந்திருந்தது என்பது வரலாற்று உண்மையாகும்.

மனுதர்மத்தில் இழிகுலத்தாரைக் குறிக்கும் “இசாலர்“ என்ற சொல்லோடு யவனர், சீனர், திராவிடர் என்றும் குறிக்கிறது.  தமிழ் தவிர்த்து பிற தென்னிந்திய மொழிகள் தோன்றாத காலம் அது.  

ஏழாம் நூற்றாண்டில் தமிழில் தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் ஆதி சங்கரரால் “திராவிட சிசு“ என்று சொல்லப்படுகிறார். எட்டாம் நூற்றாண்டின் வச்ரநந்தி என்பார் அமைத்த “திராவிட சங்கம்Ó சமண சமய கொள்கைகளைத் தமிழ் நூல்களாக வெளியிட்டன. 

மொழியறிஞர் தேவநேயப் பாவாணரின் இந்த வரிகள் “திராவிடம்Ó என்பது தமிழ் தான் தமிழ்நாடுதான் என்பதை உறுதியாக்கும். 

”வடநாட்டு ஆரிய (சமசுகிருத) நூல்களில் “திராவிடம்Ó என்னும் சொல்முதலாவது “த்ரமிளம்Ó என்றே வழங்கி வந்தது. “ழÓ கரம் வடமொழியில்லை.சில உயிர்மெய்ம் முதல்களை “ர“ கரம் சேர்த்து “த்ரÓ “ப்ரÓ எனப் புணரெழுத்துக்களாகத் திரிப்பது வடமொழி நூல்களின் வழக்கம்.

(எ-கா) படி-ப்ரதி. பவளம்-ப்ரவளம். இதனால் “தமிழம்Ó எனுஞ்சொல் “த்ரமிளம்“ எனத் திரிந்தது இயல்பே. பின்பு நாளடைவில் “த்ரவிடம்“ எனத் திரிந்தது.  பின் “திராவிடம் என்று நீண்டு வழங்கலாயிற்று. தமிழுக்கு திராவிடம் என்னும் பெயர் தமிழ் நாட்டில் வழங்காமையாலும் தமிழ் என்னும் வடிவத்தை ஒட்டிய பெயர்களே மேனாட்டிலும் வடநாட்டிலும் பழங்காலத்தில் வழங்கி வந்தமையாலும்திராவிட மொழிகளெல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவே இருந்தமையாலும்“தமிழம்Ó என்னும் பெயரே திராவிடம் எனத்திரிந்தது என்று தெளியப்படும்

-(தேவநேயபாவாணரின் 

“திராவிடத்தாய்Ó நூலிலிருந்து)  

அத்தனைக்கும் மேலாக இவர்களின் லோககுரு சங்கராச்சாரியார் தன் தெய்வத்தின் குரலில். .  சாரதா சட்டத்தை எதிர்த்த - கும்பகோணம் அருகாமையில் உள்ள திருவிசநல்லூர் லட்சுமணசாஸ்திரி என்பார் தன் இருப்பிடத்தை காசி மாநகருக்கு மாற்றிக் கொண்டபோது தாம் தமிழ் நாட்டு பார்ப்பனர் என்பதைக்காட்டிக்கொள்ள தன் பெயரை “லட்சுமணசாஸ்திரி திராவிட்“ என்று மாற்றிக் கொண்டார்  என்று  கூறியுள்ளார்.  

 எனவே  “திராவிடம்Ó என்றால் தமிழ்தான். தமிழ்நாடுதான் என்ற வரலாற்று உண்மைகளை ஆளுநருக்கு வேண்டியவர்கள் எடுத்துச் சொல் லுங்கள்.

- ஞான. வள்ளுவன்

வைத்தீசுவரன்கோயில்


No comments:

Post a Comment