செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

செய்திச் சுருக்கம்

‘கடவுளர்' மீட்க...

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்ட இரண்டு தொன்மையான ‘கடவுளர்' சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெறலாம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து தேர்வு எழுதியுள்ள மாணவ - மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களின் விடைத்தாள் நகலை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வு துறை தகவல்.

இணைப்பு

சென்னையின் பரப்பளவை விரிவாக்குவதற்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1,225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பதற்கான அரசாணை வெளியீடு.

பருவ மழை

அக்டோபர் மாதம் இறுதிக்குள் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

சட்டம்

சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலாகிறது என போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.

திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டத்தின்படி 2022-2023ஆம் ஆண்டு 3,204 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்திட ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எம்ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்.

அவகாசம்

தமிழ்நாட்டில் கூடுதல் மின்சார இணைப்புகளை கண்டறிய தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஏப்ரல் வரை ஒழுங்கு முறை ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.

புகார்

மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து பொது மக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.

அபராதம்

இந்தியாவில் வர்த்தக நெறிமுறைகளை மீறி, ஆன்ட் ராய்டு செல்போன் உள்ளிட்ட பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் கூகுல் நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் கடந்த 20ஆம் தேதி ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது. இதைத் தொடர்ந்து பிளே ஸ்டோர் கொள்கைகளை மீறியதாக நேற்று (25.10.2022) மேலும் ரூ.9.36.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


No comments:

Post a Comment