வெளிநாட்டில் அதிக ஊதியத்தில் வேலையா? காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

வெளிநாட்டில் அதிக ஊதியத்தில் வேலையா? காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை, அக். 15- வெளி நாட்டில் அதிக ஊதியத் துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசையைத் தூண்டி பல போலி நிறு வனங்கள் வலை விரித்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரித் துள்ளார். 

ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், குடும் பத்தை முன்னேற்றத் துடிப்பவர்கள், வாழ்க் கையில் எப்படியாவது முன்னேறி விட நினைப் பவர்கள், விரைவில் பணம் சம்பாதிக்கும் ஆசை கொண்டவர்கள் ஆகியோர் வெளிநாடு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் சில தனியார் நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் வெளி நாடுகளில் அதிக ஊதியத் தில் வேலை இருப்பதாக வும், குறிப்பிட்ட நாட்க ளுக்குள் பணத்தை ஏற் பாடு செய்து கொடுத்து விட்டால் உடனடியாக வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசையைத் தூண்டுகின் றனர்.

இதை உண்மை என நம்பும் பலர் கையில் இருக்கும் பணத்தை எந்தவித விசாரிப்பும் இல்லாமல் அப்படியே கொடுத்து விடுகின்றனர். இதில், சில நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் தவிர பெரும்பாலானவர்கள் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவா கின்றனர்.

வெளிநாட்டு மோகத் தில் மோசடி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் என காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுரை வழங்கி யுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,“ வெளிநாடு களில் அதிக ஊதியத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறு வனங்களின் உண்மைத் தன்மையை அறியாமல் சுற்றுலா பயண விசாவில் 6 மாத வேலை செய்ய எவரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம். இது போன்ற முகவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் தமிழ்நாடு காவல் துறை யில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவை (NRI Cell) nricelltn.dgp@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 044 28447701 என்ற தொலை பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வெளிநாட்டுக்கு வேலை செல்வோர் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். சம்பந்தப்பட் டவர் பதிவு செய்த முகவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால் காவல் துறையை அணுகலாம். அவர்களுக்குச் சரியான வழிகாட்டல் வழங்கப் படும்” என்றார்.

மேலும், அவர் வெளியிட்ட காட்சிப்பதிவில், “வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லும் நபர்களிடம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். லட்சக்கணக்கில் ஊதியம் தருகிறோம் என இளை ஞர்களை வேலைக்கு அழைத்துச் சென்று மோசடி செயலிகள், மோசடி லோன் ஆப், க்ரிப்டோ கரன்சி மோசடி ஆகிய வேலைகளில் ஈடு படுத்துவார்கள். உங்கள் செல்போன் எண், இ-மெயில் அய்டியை பயன் படுத்தி உங்களை குற்றங் களைச் செய்ய வைத்து நீங்கள் திரும்பி வர முடியாதபடி செய்து வருகிறார்கள். உங்கள் திறமையை மீறிய அளவு ஊதியத்தோடு வெளி நாடுகளில் வேலை தருவ தாகச் சொன்னால் எச் சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு காவல் துறையில் அண்மையில் உருவாக்கப்பட்ட வெளி நாடு வாழ் இந்தியர் என்ற பிரிவின் கண்காணிப்பாளர் சண் முகப்பிரியா கூறும் போது, “வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் அவர் களை அழைத்துச் செல் லும் நிறுவனம் அல்லது முகவர்கள் தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் 044 28470025 என்ற எண் ணில் தொடர்பு கொள் ளலாம். அவர்களுக்குச் சரியான வழிகாட்டல் வழங்கப்படும். வெளி நாட்டு வேலை தொடர் பாக கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 40 புகார்கள் வந்துள்ளன. எங்களுக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை. இருப்பினும் புகார் வந்தால் சம்பந்தப் பட்ட காவல் மாவட்டங் களுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக் கத் தேவையான உதவி செய்வோம்” என்றார்.

No comments:

Post a Comment