கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலி...? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலி...?

எர்ணாகுளம், அக. 15-  திருவ னந்தபுரம் கேரள மாநிலம்  பத்தனம் திட்டா பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 

12க்கும் மேற்பட்ட பெண் கள் காணாமல் போய் உள்ளனர். அவர்கள் அனைவரும் நரபலி கொடுக்கபட்டனரா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். 

கேரளாவில் நரபலி தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசார ணைக் குழு நியமிக்கப் பட்டுள்ளது. இரண்டு பெண்கள் நரபலி கொடுக் கப்பட்ட வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணை நடத்த கேரள காவல்துறை உத் தரவிட்டுள்ளது. பெரும் பாவூர் துணை காவல் கண்காணிப்பாளர் அனுஜ் பாலிவால் முதன்மை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் துணை ஆணையர் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிக ளும் இந்த சிறப்பு விசார ணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு அதில் ஒருபெண் 56 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட கொடூ ரம் நாட்டையே அதிர்ச் சிக்கு ஆளாக்கியது. இவ் வழக்கு தொடர்பாக முகமது ஷபி, பகவத் சிங், லைலா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். செப்டம்பர் 26ஆம் தேதி பத்மா காணாமல் போன நாள் முதல் சிசி டிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்த னர். அப்போது பத்மா பத்தனம்திட்டாவில் உள்ள லைலா சிங்கின் வீட்டை நோக்கி சென்ற தும் இதனையடுத்து லைலா சிங் வீட்டுக்குள் பத்மா செல்வது தெரிய வந்ததாக வும் விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் பல பெண்கள் நரபலியில் கொடுக்கப்பட்டுள்ள னரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின் றனர். கடந்த சில மாதங் களில் மட்டும் 12 பெண் கள் கணாமல் போனது கேரள காவல்துறையினர் விசா ரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அந்த பெண்களும் நர பலிக்கு கொடுக் கப்பட்டி ருக்கலாமா என்ற கோணத் தில் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment