பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் விசாரணைக் குழுவில் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் விசாரணைக் குழுவில் மாற்றம்

சென்னை, அக். 27- பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் விசாரணை பிரிவு மண்டலங்களில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது தொடர் பாக தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட அறிவிப்பு: 

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 36 வகையான உட்பிரிவுகளைச் சார்ந்த 7,94,697 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இது மாநில மொத்த மக்கள் தொகையில் 1.10 சதவீதம் ஆகும். பழங்குடி மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதி யான நம்பிக்கையுடைய முதலமைச்சர்ர் ஆணைப்படி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் சென்னை, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில் செயல்பட்டு வந்த பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணை பிரிவுகளுக் கான மண்டலங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை மண்டலம் : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு (தலைமையிடம் : சென்னை) 

சேலம் மண்டலம் : சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி (தலைமையிடம் : சேலம்) 

மதுரை மண்டலம் : மதுரை, தேனி, சிவகங்கை, விருது நகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியா குமரி, திருவாரூர், தென்காசி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை (தலைமையிடம் : மதுரை) 

வேலூர் (புதிய) மண்டலம் : வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ண கிரி (தலைமையிடம் : வேலூர்).

மடாதிபதி தற்கொலை

பெங்களூரு, அக். 27- கருநாடகாவில் ராமநகர் மாவட்டம், மாகடி அருகேயுள்ள கெம்பாபுரா கிராமத்தில் 400 ஆண்டு கள் பழைமையான கெஞ்சிகல் பண்டே மடம் உள்ளது. இதன் தலைமை மடாதிபதியாக பசவலிங்கேஷ்வரா சுவாமி கடந்த 1997 முதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 23.10.2022 அன்று இரவு மடத்தின் பணியாளர்களுடன் நிதி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தன் அறைக்கு உறங்கச் சென்றவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, மடாதிபதி தூக்கில் தொங்கினார். 

தகவலின் பேரில் கூதூர் காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்குப் பிறகு  25.10.2022 அன்று மடத்தின் வளாகத்திலேயே மடாதிபதியின் உடல் எரியூட்டப்பட்டது.

No comments:

Post a Comment