விளம்பர ரகசியம் வெளியானது! தப்பி ஓடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் சதிராட்டம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

விளம்பர ரகசியம் வெளியானது! தப்பி ஓடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் சதிராட்டம்?

வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்பட பலரும் எதிரானவர்கள் என்று ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னலில்’ முழுப்பக்க விளம்பரம் வெளியானது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

‘ஜி20’ நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய  வங்கி ஆளுநர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் இருக்கும் நேரத்தி லேயே, அங்கு இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 13 அன்று வெளியாகி இருக்கும் இந்த விளம்பரத்தில், நிர்மலா சீதாராமனோடு, ஆன்ட்ரிக்ஸ் கார்ப்  தலைவர் ராகேஷ் சசிபூஷன், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா  மற்றும் வி.ராமசுப்ரமணியன், சிறப்பு (ஊழல் தடுப்பு) சட்ட  நீதிபதி சந்திர சேகர்,

சிபிஅய் டிஎஸ்பி ஆஷிஷ் பரீக், அம லாக்கத்துறை இயக்குநர் (ED) சஞ்சய் குமார் மிஸ்ரா  மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கட ராமன்,  அமலாக்கத்துறை உதவி இயக் குநர் ஆர். ராஜேஷ் மற்றும் துணை இயக்குநர் ஏ.சாதிக் முகமது ஆகி யோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. “அரசியல் மற்றும் வணிக போட்டி யாளர்கள் உடனான கணக்கைத் தீர்த் துக் கொள்ள அரசு நிறுவனங்களை அத்துமீறல் செய்வதன் மூலம் இந்த 11 பேரும் சட்டத்தின் ஆட்சி யை சீரழித்து, முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை பாதுகாப்பற்றதாக ஆக்கியவர்கள்” என்று அந்த விளம்பரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த விளம்பரம் கடந்த 2 நாள்களாக உலகளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலை யில், இதன் பின்னணியில் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் மேனாள் தலைமை நிர்வாக அதிகாரியான ராமச் சந்திரன் விஸ்வநாதன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை தகவல் மற்றும் ஒளி பரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோ சகர் கஞ்சன் குப்தா உறுதிப்படுத்தி யுள்ளார்.

இந்தியாவையும் அதன் அரசாங் கத்தையும் குறிவைக்கும் அதிர்ச்சியூட் டும் மோசமான விளம்பரம் ‘வால்ஸ்ட்ரீட் ஜெர்னலி’ல் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரத்தையும், இது போன்ற விளம் பரங்களையும், பிரச்சாரத்தையும் தேவாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து- தப்பி யோடிய ராமச்சந்திர விஸ்வநாதன் தான் நடத்துகிறார்” என்று குப்தா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ‘தேவாஸ் மல்டி மீடியா’வானது, ஆன்ட்ரிக்ஸ் கார்ப்ப ரேஷன் நிறுவனத்துடன் இணைந்து, ஜிசாட்-6 மூலம் எஸ்- பேண்ட் மூலம் அலைபேசிகளுக்கு வீடியோக்கள், மல்டி மீடியா மற்றும் தகவல் சேவைகளை வழங்குவதற்கான - வயர்லெஸ் பிராட் பேண்ட் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனத்திடம் (ISRO) பெற்றுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் கடந்த 2011-இல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், செயற்கைக்கோள் ஒப் பந்தத்திற்காக பெறப் பட்ட ரூ. 529 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முத லீட்டில் 85 சதவிகிதத்தை, வேறு பணிகளில் திருப்பி விட்டதாக தேவாஸ் மல்டி மீடியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த விஸ்வநாதன் மற்றும் ஒன்பது பேர் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆன்ட்ரிக்ஸ் நிர்வாக இயக்குநர் கே.ஆர். சிறீதரா போன்ற சிலருக்கு எதிராக சிபிஅய் எப்அய்ஆர் பதிவு செய்ததுடன், மூர்த்தி, எம்.ஜி.சந்திர சேகர் மற்றும் விஸ்வநாதன் ஆகிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், ஜிசாட்-6 மூலம் எஸ்-பேண்ட் மூலம் அலைபேசி களுக்கு வீடியோக்கள், மல்டி மீடியா மற்றும் தகவல் சேவைகளை வழங்கு வதற்கான உரிமத்தை வழங்கி தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கு ஆதரவாக தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தி னார்கள் என்றும் குற்றம் சாட்டி யுள்ளது.  இந்தக் குற்றச்சாட்டுக் களின் அடிப்படையில், கடந்த ஜூன் மாதம், விஸ்வநாதனை “தப்பியோடிய பொருளாதார குற்றவாளி” என்று அறி விக்குமாறு அமலாக்கத்துறை பெங்க ளூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது.

மேலும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம், மே 2021 இல் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் (National Company Law Tribunal - NCLT) கலைக்கப் பட்டது. இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் நிர்வாக  அதிகாரியான ராமச்சந்திர விஸ்வநாதன்தான், தற் போது ‘வால்ஸ்ட்ரீட் ஜெர்னலில்’ வந்த விளம்பரத்தின் பின்னணி யில் இடம் பெற்றுள்ளார். “தன் மீது நியாயமற்ற விசாரணையை இந்தியா நடத்தி யிருப் பதாக கூறியிருக்கும் விஸ்வநாதன், தன்னை நியாய மற்ற விசாரணையால் குற்றவாளியாக அறிவித்து சொத்துக் களைப் பறிமுதல் செய்து இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், 11 இந்திய உயர் அதிகாரிகள் மீது “மேக் னிட்ஸ்கி சட்டத்தின்” கீழ் அமெரிக்கா பொருளா தாரத் தடைகளை விதிக்க வேண்டும்” என்று விளம்பரத்தில் வலி யுறுத்தியுள்ளார். ராமச்சந்திர விஸ்வ நாதன், ஏற்கெனவே அமெரிக்க வெளி யுறவுத் துறையிடமும் இதுதொடர்பாக மனு அளித்து இருந்தார்.  இந்தியாவால் தப்பியோடிய குற்றவாளியாக அறி விக்கப்பட்ட ராமச்சந்திர விஸ்வநாதன் இப்போது அமெரி க்கக் குடிமகனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக விளம்பரத்தின் கீழே ஒரு க்யூஆர் (Quick Response) குறி யீடு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை சொடுக்கினால், அது அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘சுதந்திரத்தின் எல் லைகள்’ என்ற  சிந்தனையாளர் குழு வின் (Frontiers of Freedom)  இணைய தளத்திற்குள் செல்கிறது. அந்த அமைப்பின் சார்பிலேயே விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், ‘சுதந்திரத்தின் எல்லைகள்’ (Frontiers of Freedom)  அமைப்பின் தற்போதைய தலைவர் ஜார்ஜ்  லாண்டரித், வால்ஸ்ட்ரீட் ஜெர்னலில் வெளிவந்த நிர்மலா  சீதாராமன் உள்ளிட்டோருக்கு எதிரான விளம்பரத்தை தனது  ட்விட்டரில் பகிர்ந்து, கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவில், மேக்னிட்ஸ்கி சட்டத்தின் கீழ் 11  பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும். நிர்மலா சீதா ராமன், நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் நடவடிக் கைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகின்றன: அது இந்தியா முதலீடு செய்ய ஆபத் தான இடம் என்பதே ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் எங்கே போய் முடியுமோ?

No comments:

Post a Comment