கோத்தபய, மகிந்த ராஜபக்சேமீது சட்ட நடவடிக்கை இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

கோத்தபய, மகிந்த ராஜபக்சேமீது சட்ட நடவடிக்கை இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு

கொழும்பு, அக்.10 இலங்கை யில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் மேனாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே உள்பட 32 பேர் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. நான்கு புறமும் கடல் சூழ்ந்த அழகிய தீவு தேசமான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக் கிறது. வெளிநாட்டு செலா வணி பற்றாக்குறையால் அத் தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் உள்பட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்களுக் கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் வெகுண் டெழுந்தனர். தங்களின் இந்த நிலைமைக்கு ஆட்சி அதிகா ரத்தை தன்னிடம் வைத்திருந்த ராஜபக்சே சகோதரர்களே காரணம் என நினைத்து அவர்களுக்கு எதிராக கடும் போரட்டத்தை முன்னெடுத்தனர். போராட் டத்தில் வன்முறை வெடித்து இலங்கை பற்றி எரிந்தது. மக்களின் போராட்டத்துக்கு அஞ்சி முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.

ஆனால், அதிபர் பதவியில் இருந்து முதலில் விலக மறுத்து அடம் பிடித்த கோத்தபய ராஜபக்சே, மக்கள் அதிபர் மாளிகையை சுற்றி வளைத்ததால், வேறு வழியின்றி தப்பி ஓட்டம் பிடித் தார். இதையடுத்து தற்போது இலங்கை அதிபராக பதவி யேற்றுள்ள ரணில் விக்ரம சிங்கே இலங்கையில் பொரு ளாதார நிலையை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை அப்படியே தான் உள்ளது. இதற்கிடையே நாட்டின் இந்த கடும் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே உள்பட மேலும் 37 பேர் மீது நிதி முறைகேட்டில் ஈடுபட்ட தாகவும், தவறான பொருளாதார மேலாண்மை களை கையாண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக டிரான்ஸ்பேரன்சி இன்டர் நேஷனல் சிறீலங்கா என்ற அமைப்பும், இலங்கை வர்த் தக சபையின் மேனாள் தலை வர் சந்திர ஜெயரத்னே உள் பட சிலர் இலங்கை உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் 37 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தது. மேலும், பன்னாட்டு நிதியத் தில் நிதி (அய்எம்எப்) உதவி கோரியதில் ஏற்பட்ட தாம தம், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை மதிப்பை ரூபாய் 203 என நிர்ணயித்த இலங்கை நிதி ஆணையத்தின் முடிவு உள்ளிட்டவை குறித்து கணக்கு தணிக்கை செய்து  சமர்ப்பிக்க வேண்டும் என் றும் உத்தரவிட்டது.


No comments:

Post a Comment