இலவசங்களைக் குறை கூறுவதா? அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

இலவசங்களைக் குறை கூறுவதா? அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

புதுடெல்லி, அக்.24 அடிப்படை வசதிகளை பெறும் சாதாரண மக் களை அவமதிக்க வேண் டாம் என பிரதமர் மோடியை டில்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

 மாநில அரசுகள் இலவசங் கள் வழங்குவதை பிரதமர் மோடி தொடர்ந்து எதிர்த்து வருகிறார். 'ரேவடி' கலாச்சாரம் என இதை வர்ணித்து வரும் அவர். இதனால் வரி செலுத் துவோர் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளை பெற்ற 4.51 பயனாளிகளிடையே பேசும்போது இதை அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'வரி செலுத்தும் ஒவ்வொருவரும், நான் தீபாவளியைக் கொண்டாடும் போது, மத்திய பிரதேசத்தில் உள்ள ஏழை சகோதரர்களும் தீபத் திருநாளில் மகிழ்கிறார் கள் என்று நினைக்க வேண்டும், அவர் ஒருகான்கிரீட் வீடு பெறுகிறார்.  ஆனால் தன்னிடம் வசூலித்த பணம் 'ரேவடிவி'னி யோகத் துக்காக செலவிடப்ப டுவதைக் கண்டு இந்த வரி செலுத்துபவர் வேதனையடை கிறார்' என மோடி கூறியிருந்தார்.

 பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு டில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள் ளார். இதன் மூலம் சாதாரண மக்களை அவமதிக்க வேண் டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:

விலைவாசி உயர்வால் மக் கள் அனைவரும் மிகவும் சுவ லையில் உள்ளனர். அதனால் கல்வி, சிகிச்சை , மருந்துகள், மின்சாரம் போன்றவற்றை ஏன் அவர்கள் இலவசமாக பெறக்கூடாது?

அரசியல்வாதிகள் ஏராள மான வசதிகளை இலவசமாக பெறுகிறார்கள். ஏராளமான பணக்காரர்களின் கடன் களை வங்கிகள் ரத்து செய்கின் றன.

அப்படியிருக்க இலவச திட் டங்களை மீண்டும் மீண்டும் "ரேவடி" என அழைத்து, பிரதமர் மோடி சாதாரண மக்களை அவமதிக்க வேண்டாம்,

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரி வால் குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment