பெண்ணை கன்னத்தில் அறைந்த கருநாடக பி.ஜே.பி. அமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

பெண்ணை கன்னத்தில் அறைந்த கருநாடக பி.ஜே.பி. அமைச்சர்

பெங்களூரு, அக்.24 நில உரிமை பட்டா வழங் கும் விழாவில் கருநாடக பாஜக அமைச்சர் சோமண்ணா, பெண்ணை கன்னத்தில் அறைந்த காணொலி காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 

கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹங்கலா கிராமத் தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்கும் விழா  நடந்தது. இதில், கருநாடக வீட்டு வசதித்துறை அமைச்சரும், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சோமண்ணா கலந்து கொள் வதாக இருந்ததால், இந்த விழாவில் நில உரிமை பட்டாக்களை வாங்க ஏராளமானோர் கூடி இருந்தனர். இந்த விழாவிற்கு அமைச்சர் பல மணி நேரம் தாமதமாக வந்தார்.

இந்த விழாவையொட்டி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு பெண் ஒருவர், அமைச்சரிடம் தனக்கு அரசு சார்பில் நிலம் வழங்க வேண்டும் என்று  அழுது முறையிட்டுகொண்டு இருந்தார். 

 சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு வேறு நிகழ்ச்சிக்கு செல்ல இருந்த அமைச்சர் இந்த பெண்ணின் கோரிக்கையால் நேரமாவது பற்றி கோபம் கொண்டு ஆத்திரமடைந்த அமைச்சர் சோமண்ணா, அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். பிறகு சில நிமிடங்களில் அங் கிருந்து சென்றுவிட்டார் 

இதுதொடர்பான காணொலி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சர் சோமண்ணாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிகழ்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அமைச்சர் சோமண்ணாவை உடனடி யாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் அலுவலகம் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளது. 

அமைச்சர் தரப்பில் வெளியிட்ட காணொ லியில், அமைச்சர் அறைந்ததாகக் கூறப்படும் பெண்,  நான் மிகவும் ஏழ்மையில் இருப்பதால் எனக்கு நிலம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் காலில் விழுந்து கெஞ்சினேன். அப்போது அமைச்சர் சோமண்ணா என்னை மேலே தூக்கி, உதவியதாகக் கூறுகிறார். 

ஆனால், காணொலியில் அமைச்சர் ஆத் திரத்தில் அறைவது தெளிவாகத் தெரிகிறது. இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் இதுவரை சோமண்ணா எந்த பதிலும் அளிக்கவில்லை.

சித்தராமையா கண்டனம்

ராய்ச்சூரில் சித்தராமையா செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

சாம்ராஜ்நகரில் நடந்த கொடூரம் அமைச்சர் சோமண்ணாவின் கலாசாரத்தை காட்டுகிறது. ஒரு பெண் தனது துயரங்களை அரசிடம் விவ ரிக்கிறார். ஆனால் அமைச்சர் சோமண்ணா அவருக்கு கடுமையான வார்த்தைகளால் பதில் அளித்ததுடன், அவரை அடித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சோமண்ணா அமைச்சராக இருக்க தகுதியற்றவர். உங்களுக்கு பொறுமை யும், மக்களின் குறைகளை சரி செய்யும் தாகுதியும் இல்லை என்றால்,  பதவியைவிட்டு செல்லுங்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரசாமி கடும் கண்டனம்

பொதுமக்கள் அமைச்சரிடம் புகார் அளிப் பது வழக்கமாக நடக்கும் செயல். அந்தப் புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது அமைச்சரின் கடமை. ஆனால், குண்டலுபேட் டையில் அமைச்சர் சோமண்ணா ஒரு பெண்ணை அறைந்துள்ளார். இது பாரதீய ஜனதாவின் மனிதாபிமானமற்ற செயலை காட்டுகிறது.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் பாரதீய ஜனதா கட்சி அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறது. அதேபோல நாடு முழுவதும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது. ஆனால், பாரதீய ஜனதா அரசு ஹிந்தியை கட்டாய மாக்குவோம் என்று முழக்கமிட்டு வருகிறது. இதைவிட மக்கள் பிரச்சினை எவ்வளவோ உள்ளது. குடகில் மண் சரிவு ஏற்பட்டு 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதுவரை அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழையால் ஏராளமான பயிர்கள் நாசமாகியது. இழப்பீடு வழங்கவில்லை. இதில் ஆர்வம் காட்டாமல் இன உணர்வுகளைத் தூண்டுவது, கலவரங்களை ஏற்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர். இதனால் பாரதீய ஜனதாவின் ஆட்சி நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment