கடவுள் சக்தியாவது - வெங்காயமாவது! இதுதான் துர்காவின் சக்தியோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

கடவுள் சக்தியாவது - வெங்காயமாவது! இதுதான் துர்காவின் சக்தியோ!

பூசையின்போது மின்சாரம் பாய்ந்து பக்தர் இருவர் பலி

பாரபங்கி, அக் 8  உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கியில் கடந்த சில நாட்களாக துர்காபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. 5.10.2022 அன்று கடுமையான மழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள துர்கா பூசைப்பந்தல் ஒன்றில் மின்சாரக் கசிவு ஏற்பட்டுள்ளது. 

 அப்போது ஆடிக்கொண்டு இருந்தவர்களில் சிலர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது, அவர்கள் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தனர். 

இதனால் மின்சாரம் அனைவர் மீதும் பாயத்துவங்கியது. இதில் ரோகித் என்ற 17வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்கு மேல் பலத்த காய மடைந்தனர்.   தகவல் அறிந்து  உடன டியாக காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து மின்சாரத்தை துண்டித்து காயமடைந்தவர்களை மீட்டு மருத் துவமனையில் சேர்த்தனர். இந்நிகழ்வு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment